Monday 23 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆரம்பம்தான்......
_*பாஜக சொன்னது உண்மையாயிருச்சு, நான் என்ன இளிச்சவாயனா..?*_
_*சீறிய லலிதா ஜுவல்லரி ஓனர் - தி.மு.க-வினர் அதிர்ச்சி !*_
_தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிலங்களை அபகரித்தல், போலி பத்திரம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை பிடுங்குதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறும் என்று அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூறிவந்த நிலையில், அது உண்மைதான் என கூறுவது போன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது._
_தமிழகத்தில் மிகப் பிரபலமான லலிதா ஜூவல்லரி பல ஊர்களில் தனது கிளைகளை நிறுவி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. புனித நகரமான திருவண்ணாமலையில் தனதுகிளையை திறக்க முடிவு செய்த அந்நிறுவனம் இதற்காக இடம் தேடியபோது திருமஞ்சன கோபுரம் அருகே தனது பெயரில் இடம் இருப்பதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க பொருளாளராகவும் உள்ள பன்னீர்செல்வம் கூறியுள்ளார்._
_அதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு தனது இடம் எனக் கூறிய பன்னீர்செல்வம் 1.75 கோடி ரூபாய்க்கு லலிதா ஜூவல்லரிக்கு இடத்தினை விற்பனை செய்துள்ளார். அது சம்மந்தமாக ராதா என்பவர் பிரச்சனை செய்தபோது பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது._
_இதுதொடர்பாக ஜூவல்லரி தரப்பு முக்கிய பிரமுகர்கள் மூலமாக பன்னீர்செல்வத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பயனில்லை. இதனை தொடர்ந்து, லலிதா ஜூவல்லரியின் திருவண்ணாமலை கிளை மேலாளர் பத்மநாபன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், தனது தனிப்பட்ட செல்வாக்கு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விவகாரத்தை அமுக்கியதாக கூறப்படுகிறது._
_பின்னர், லலிதா ஜூவல்லரி தரப்பு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்ட சிபிசிஐடி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனிடையே, தாம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் அவர் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார் பன்னீர்செல்வம்._
_பன்னீர்செல்வம் இதுபோன்ற பலரின் நிலங்களை போலி பத்திரம் தயாரித்து விற்றுள்ளதாகவும், நிலத்திற்கு உரியவர்கள் கேட்டால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி அடங்கியதாக கூறப்படுகிறது. மிக பிரபல நிறுவனத்தையே ஏமற்றிய பன்னீர் செல்வத்திற்கு சாதாரண மக்களை மிரட்டுவது ஒன்றும் பெரிதல்ல என வேதனை தெரிவிக்கின்றனர்._
_மேலும் பா.ஜ.க பலமுறை சொன்னது உண்மையாகியுள்ளது. இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர் பல முக்கிய பிரமுகர்களிடம் பேசியும் காரியம் நடக்காத நிலையில் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். என்னை பார்த்தால் இளிச்சவாயன் என எழுதியுள்ளதா? எனவும், நீதிமன்றத்தில் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளதால், நிலத்தை ஏமாற்றிய தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது._
_அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற கலக்கத்தில் உள்ளதாம் தி.மு.க. தற்போது இந்த விவகாரம் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவந்துள்ளதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை மூடி மறைக்கப்படுமா? என பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்._

No comments:

Post a Comment