Thursday 19 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மகிழ்வான நேரங்கள் நல்ல ஞாபகங்கள் ஆகின்றன*
*🌸கடினமான நேரங்கள் நல்ல பாடங்கள் ஆகின்றன*
பிறர் நம்மைப்பற்றி எடை போடுவது இருக்கட்டும். நம்மை நாமே எடைபோட்டுப் பார்ப்போம். நம்மில் எத்தனை பேர் நம்மைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கிறோம். நம்மில் பலருக்கு அது இல்லை. திறமை இருந்தும் அதை மறுப்போர் பலர் உண்டு . மறைப்போர் பலர் உண்டு. குடத்திலிட்ட விளக்காய் அவர்கள் காணாமல் போவதுண்டு.
*༺🌷༻*
நம் மனதில் எப்போதுமே *நேர்மறை(positive)* எண்ணங்களே இருக்க வேண்டும். *எதிர்மறை(negative)* எண்ணங்கள் நம் மனதை ஆக்ரமித்துக்கொண்டால், அவை நம்முடைய வேலை செய்யும் திறம், மதிப்பீடு செய்யும் திறம் எல்லாவற்றையும் குறைத்து விடும். மகரயாழ் தினசரி வாழ்க்கையில் எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டால் மன சஞ்சலம், மனக்கிலேசம் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். வேலை செய்ய தடையாய் அமையும் எண்ணங்களைத் தவிருங்கள். உங்களுடைய சிறந்த குணங்கள் என்று எவற்றையெல்லாம் நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்கள் மெச்சுங்கள். நீங்கள் நீங்களாய் இருப்பதற்கு பெருமைப்படுங்கள். உங்களை நீங்களே நேசியுங்கள்.
*༺🌷༻*
எண்ணங்கள் மட்டுமல்ல, உங்களைச்சுற்றியுள்ள அனைத்துமே நேர்மறை பிரதிபலிப்பதாய் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் உங்களைப்போன்றே நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை எனில் அப்படிப்பட்டவர்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள், குடும்பத்தினர் அனைவரும் தங்களது கிண்டல் மற்றும் கேலி மூலம் உங்களது தன்னம்பிக்கையை உடைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பார்க்கும் வீடியோக்கள் , வாசிக்கும் புத்தகங்கள் என அனைத்தும் உங்களது தன்னம்பிக்கையை சிதைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
*༺🌷༻*
தினமும் காலையில் எழுந்தவுடன் *உங்களை எண்ணி பெருமிதம்* கொள்ளுங்கள். அதே போல் படுக்கப்போகும் முன்பும் நீங்களே உங்கள் முதுகில் தட்டிக்கொடுங்கள். உங்களது கடந்த கால *வெற்றிகளைப் பட்டியலிடுங்கள்.* சிறியதோ பெரியதோ நீங்கள் சாதனை என்று நினைத்தவற்றைப் பட்டியலிடுங்கள். நீங்களே வியந்து போவீர்கள்., *உங்களுக்கு இத்தனை திறமைகளா என்று.* உங்கள் சாதனைகள் மற்றும் திறமைகளை எப்போதும் எழுத்தில் பார்த்தால் அது தரும் இன்பமே அலாதி தான். உங்களது சிறந்த குணநலன்களை வரிசைப்படுத்துங்கள். உங்களது வலிமை உங்களை ஆச்சர்யப்படுத்தும்.
*༺🌷༻*
எதையுமே முதலிலேயே திட்டமிடுங்கள். #மகரயாழ் திட்டமிடல் காரியத்தை சுலபமாக்கும். புதிது புதிதாய்த் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.உலகம் பரந்து விரிந்தது. நாம் கற்றுக்கொள்ள ஏராளமானவற்றை வாரி வழங்குகிறது. நாம் தான் *கூழாங்கல்* எது *வைரக்கல்* எது என்று கண்டறிந்து திறம்பட பயனுற வேண்டும்.
*திருமதி. முருகேஸ்வரி ரவி...

No comments:

Post a Comment