Monday 16 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலக மக்கள் நலம் பெற வேண்டும்....
மோடியின் தலைமை பண்பு..
கொரோனா வைரஸ் தொற்றால், உலகளவில் 5000க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளனர். கொடிய வைரஸ் கொரோனாவை எதிர்கொள்வது பற்றி சந்தித்து பேசலாம் என தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இப்போது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மோடியின் அழைப்பை ஏற்றுள்ளன.
மோடியின் அழைப்பை ஏற்ற முதல் நாடான பூடான் பிரதமர் லொதே ஷெரிங், தனது டுவிட்டர் செய்தியில்.."இதனைத் தான் நாம் தலைமை பண்பு என்று அழைக்கிறோம். இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், இதுபோன்ற காலங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். சிறிய பொருளாதாரங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனஆகையால் அனைவரும் இணைந்து செயல்படுவோம். உங்களது தலைமையின் கீழ் பயனுள்ள முடிவுகளை காண்போம். வீடியோ சந்திப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன்." என்று தெரிவித்து உள்ளார்.
மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொகம்மத் சோலிஹ் தனது டுவிட்டர் பதிவில், " இந்த முன்முயற்சிக்காக எனது பாரட்டுகளை மோடிக்கு தெரிவித்து கொள்கிறேன். கோவிட்-19 வைரைஸ எதிர்கொள்ள கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.இத்திட்டத்தை மாலத்தீவு வரவேற்கிறது" என்று கூறி உள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டர் பதிவில் , "சிறந்த முன்முயற்சிக்கு நன்றி. ஆலோசனையில் பங்கேற்கவும், நாங்கள் கற்றுக் கொண்டதை பகிரவும் , மற்ற நாடுகளில் இருந்து கற்றுகொள்ளவும் இலங்கை தயாராக உள்ளது. இந்த கடினமான காலங்களில் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம்." என்று கூறி உள்ளார்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது டுவிட்டர் செய்தியில், "பிரதமர் மோடியின் யோசனையை வரவேற்கிறேன். கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு வலுவான உத்தியை உருவாக்க வேண்டும்.இந்த கொடிய நோயிலிருந்து நமது குடிமக்களைப் பாதுகாக்க சார்க் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற எமது அரசு தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச துணை வெளியுறவு அமைச்சர் ஷாகிரார் ஆலம், தனது டுவிட்டரில், " எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த திட்டத்தை வரவேற்கிறார். மோடி, மாலத்தீவு அதிபர், நேபாள பிரதமர், பூடான்பிரதமர், இலங்கை அதிபர் மற்ற நாட்டு தலைர்களுடன் , ஆக்கபூர்வமான விவாதத்திற்கு ஆர்வமாக உள்ளார். பிராந்தியத்திற்கும் உலகத்துக்கும் இந்த சோதனையான நேரத்தில் முன்னேறிச்செல்லும் வழியைப் பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டுள்ளார். என தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் உள்ள ஆப்கன் தூதர் தாஹிர் காதிரி வெளியிட்டுள்ள வீடியோவில், "கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள, ஒரு வலுவான உத்தியை உருவாக்குவதற்கு சரியான நேரத்தில் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். நாம் ஒன்றுபட்டால் வாழ்வு, பிரிவுபட்டால் தாழ்வு" என்று கூறி இருந்தார்.
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக டுவிட்டர் செய்தியில், "கோவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக மற்றும் பிராந்திய அளவில் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. சார்க் உறுப்பு நாடுகளின் வீடியோ கான்பரன்சில் நாங்கள் பங்கேற்போம்" என தெரிவித்துள்ளார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment