Monday 16 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அவசரம் அவசியம்....
மத்தய அரசு கவனிக்குமா..?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் குடியுரிமை வழங்குமே தவிர யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என மத்திய அரசு பலமுறைவிளக்கம் கொடுத்தும், குடியுரிமை பறிபோகும் என்ற அச்சத்தில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து அந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.
அதேசமயம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களான இந்துக்கள் பல லட்சம் பேர் தங்களது இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2015 ஜனவரி முதல் 2019 அக்டோபர் வரையிலான காலத்தில் 5.8 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்திய குடியுரிமை கைவிட்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 1.10 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை மத்திய அரசிடம் சரண்டர் செய்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் குடியுரிமை கைவிட விண்ணப்பத்தவர்களில் அதிகபேர் அமெரிக்காவில் செட்டிலான இந்தியர்கள். அடுத்து ஆஸ்திரேலியா, கனடா நாடுகளிலிருந்து குடியுரிமை கைவிட விண்ணப்பம் செய்து இருந்தனர்.
இவர்கள் அனைவரும் இந்துக்களே..இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்துறையில் வல்லுனர்கள்.இப்படி நன்கு படித்த புத்திசாலி இந்துக்கள் எல்லாம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டால்..?பின் இந்தியாவின் முன்னேற்றம்..?
இந்தியா இந்துக்களுக்கான நாடுதான்,இப்பொழுதும் இந்துக்கள் மெஜாரட்டியாக உள்ள நாடுதான்..ஆனால் இந்துக்கள் சுதந்திரமாக வாழ தகுதியான நாடா..?ஆம் என்றால்,பின் ஏன் இவ்வளவு இந்துக்கள் அந்நிய நாடுகளில் குடியேறுகின்றனர்?
இந்தியாவில் இஸ்லாமியர்கள் மைனாரட்டிதான்..ஆனால்..?ஒரு இஸ்லாமியர் கூட அரபு நாடுகளில், அல்லது பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் குடியுரிமை பெற விரும்புவதில்லையே ஏன்?எங்கே இந்த புதிய இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்தால் நமது இந்திய குடியுரிமை இல்லாமல் போய்விடுமோ என அச்சத்தில் உயிரை கொடுத்து போராடும் இஸ்லாமியர்களின் காரணம் என்ன?
இந்தியா யார் வாழ உகந்த நாடாக உள்ளது?
இப்படி நல்லவர்கள்,வல்லவர்கள் எல்லாம் நாட்டை விட்டு போய்விட்டால்,வரும் காலத்தில் இந்தியாவில் மிஞ்சி இருப்பவர்களில் அதிகம் பேர்,தீவிரவாதியும், குண்டு வைப்பவனும், கள்ள கடத்தல்காரனும்,மத,சாதி வெறி பிடித்தவனும்,லஞ்சம்,ஊழல்,கொலை,கொள்ளை,கற்பழிப்பு செய்பவனும்,மது போதையில்,அரசியல்,சினிமா என மயங்கி கிடப்பவனுமாகத்தானே இருக்கும்?
அதலால், மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்..பிறந்த மண்ணை, கலாச்சாரத்தை,உற்றார் உறவினரை விட்டு நன்கு படித்த இந்துக்கள் அந்நிய நாட்டில் குடியேற விரும்புவது ஏன்?அவர்களின் எதிர்பார்ப்பு என்ன?என கவனத்தில் எடுத்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..இந்த அரசு செய்யாவிட்டால்..?இனி வேறு எந்த அரசு செய்வது..?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment