Monday 23 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பிரபல பாடகி கொரோனா தொற்று இருப்பதை மறைத்து அரசியல் தலைவர்களுக்கு விருந்து..
மும்பையில் உள்ள பிரபல பாடகி கனிகா கபூர் தனக்கு கொரோனா இருப்பதை மறைத்து அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட விருந்தில் கலந்து கொண்டார். அதனால் தற்போது அந்த விருந்தில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உண்மையை மறைத்ததற்காக கனிகா கபூர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிகா கபூரின் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பஜக எம்பி துஷ்யந்த், அவரது தயாரும் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே மற்றும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
கனிகா கபூரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின்னர், துஷ்யந்த், குடியரசுத்தலைவர் சில எம்பிக்களுக்கு கொடுத்த விருந்திலும், திமுக எம்பி கனிமொழி கொடுத்த விருந்திலும் கலந்துகொண்டுள்ளார். அதனால் அந்த விருந்தில் அவருடன் கலந்துகொண்ட மற்ற எம்பிக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விருந்துகளில் துஷ்யந்த் கலந்துகொண்டபோது, கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததும், அவரது நிகழ்ச்சியில் துஷ்யந்த் கலந்துகொண்டதும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அந்த தகவல் தெரியவந்திருப்பதால், அவருடன் விருந்தில் கலந்துகொண்ட சக எம்பிக்கள் அவர்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கொரானா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில்,தஞ்சை அரசு மருத்துவமனையில் தனி வார்ட்டில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றுவிட்டதாகவும்,அவரை தேடிவருவதாகவும் இன்று ஒரு செய்தியை பார்த்தேன்,
இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் தான் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் ஆகும். இவற்றைத் தடுப்பதற்காக அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை செயல்படுத்துவதே நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என கருதுகிறேன்.
நமது நலனிற்காக, நமது பிரதமர்,நமது சுகாதாரத்துறை மந்திரி,மற்றும் டாக்டர்கள்,நர்ஸ்கள்,தூய்மை பணியாளர்கள் எல்லாம் தன் உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.நாம் பொறுப்பில்லாமல் இருந்தால்..?நம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் இல்லை எனில் பயன்..?

No comments:

Post a Comment