Saturday 21 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிந்தனைக் களம்*
பல திறமையாளர்களை நீங்கள் கவனித்திருக்கலாம். கிடுகிடுவென்று உயர்ந்து வருவார்கள். சடாரென்று ஒரு கட்டத்தில் நிலைகுத்தி நின்றுவிடுவார்கள். அதன்பின் அவர்களிடம் புதிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது!
ஏன்?
உங்களைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டு இருக்கும் வலைகளிலிருந்து விடுபட்டால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்! அதற்குப் பிறகும் வளர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்காதா என்ன? இருக்கும். ஆனாலும், கிடைத்திருப்பதை விட்டுவிடக்கூடாது என்று அச்சத்துடன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுவார்கள். அதற்கு அப்புறம் எப்படி வளர்ச்சி இருக்கும்?
குட்டி மண் தொட்டியில் வேரோடு வைத்து விற்கப்பட்ட ஒரு செடியை வாங்குகிறீர்கள். பத்திரமாக நிழலில் வைத்தப் பார்த்துக் கொண்டால், தொட்டியில் செடி வேகமாக ஓரளவுக்கு வளரும். பிறகு ஒரு கட்டத்தில் போதிய இடமின்றி, அது தன் வளர்ச்சியைக் குறுக்கிக் கொள்ளும்.
அதே செடியை பூமியில் எடுத்து நட்டிருந்தால், அது பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கும். கடைசி வரை புதிது புதிதாகக் கிளைகளை எல்லாத் திசைகளிலும் அனுப்பிக் கொண்டு இருக்கும்.
உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான்!
வளர வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்குள் தகதகத்துக் கொண்டு இருக்கிறது.
இப்போதிருக்கும் மண் தொட்டியை உடைத்துப் போட நீங்கள் தயங்குவதால், வளர முடியாமல் தவிக்கிறது.
உங்களைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டு இருக்கும் வலைகளிலிருந்து விடுபட்டால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்!
👤 *இனிய காலை வணக்கம்*

No comments:

Post a Comment