Saturday 14 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒருவரின் சொல்லும் செயலும் தான் அவர் எத்தகைய அரசியலை ஏற்றிருக்கிறார் செயல்படுத்த நினைக்கிறர் அவரின் அகம் என்ன..!? புறம் என்ன.!? பின்புலம் என்ன என்பதை வெளிப்படுத்தும்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் இதுதான்..
தமிழர்கள் மற்றும் திராவிட இயக்கம் என்றால் அவருக்கு வேப்பங்காயாய் கசக்கிறது
ஆனால்,தமிழை நேரடியாக (கர்நாடக வட்டாள் நாகராஜ் போல) எதிர்த்தால் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பதால் திராவிட எதிர்ப்பு அரசியலை பல காலமாக இலை மாறாக செய்து வருகிறார்
கர்நாடகத்தில் ரஜினி படம் மட்டும் சிறிய எதிர்ப்பை மட்டும் காண்பித்து விட்டு படம் ஓடுவதற்கு அனுமதிப்பார்கள் -இனப்பாசம்
தமிழருவிமணியன் போன்றோர் நான் திராவிட இயக்கத்தின் அழிவை சாவதற்குள் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை என்று பேசுவதெல்லாம் நடிகர் ரஜினிகாந்தின் குரல்தான்
 திராவிட இயக்கத்தலைவர்களை ,தமிழர் இயக்கத்தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் நாராயணன் திருப்பதி (பாஜக) ஆகியோரின் குரலில் எண்ணத்தில் செயல்பாட்டில் ரஜினிகாந்தும் இரண்டர கலந்துள்ளார்
. யூடியூப் வீடியோ மூலம் தரம் தாழ்ந்து தமிழர் தலைவர்களை, திராவிட இயக்கத்தலைவர்களை பிற்பட்ட சமுதாயத்திலிருந்து வந்து தங்கள் உழைப்பின் மூலம் இதழியல் துறையில் முன்னணி இடத்தை பிடித்திருப்போரை விமர்சிக்கும் மாரிதாஸ் போன்ற விலாசமற்றோரின் விலாசமே ரஜினிகாந்த் தான்
ரஜினிக்கு வரலாறு தெரியவில்லை 1967 -ல் காங்கிரஸிடமிருந்து கடும் போராட்டத்தின் மூலம் தேர்தல் அரசியலில் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று பேரறிஞர்அண்ணா மீட்டெடுத்து அவர் முதல்வராகும் பொழுது ரஜினிக்கு வயது -18 வயது - பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட், ஊர்:மஹாராஷ்டிரா
1967 முதல் இன்று வரை காமராஜர்,பக்தவச்சலம்,இந்திராகாந்தி,மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ப.சிதம்பரம் போன்றோரெல்லாம் திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்து அதில் மண்ணை கவ்வி பின்னர் திராவிட இயக்கங்களுடன் கூட்டணி சேர்ந்து அதன் மூலம் கொடுத்த..பிச்சை போட்ட எம்.எல்.ஏ .எம்பி,சீட்டுகாளால் தான் பிரதமர் பதவியை அடைந்தனர் தலைவர்களாக வாழ்ந்தனர்,அமைச்சர்கள் ஆனார்கள் வசதி வாய்ப்புகளை பெற்றார்கள்,பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்
திராவிட கட்சிகள் செய்த தவறு அழிந்து போயிருக்க வேண்டிய கட்சிகளை கூட்டணி சேர்த்து வாழ வைத்துக் கொண்டிருப்பதுதான்
காங்கிரஸோ, பாரதிய ஜனதா கட்சியோ. தனித்து நின்றால் டெப்பாசிட் காலியாகும் நிலையில் தான் அன்றும் இன்றும் உள்ளது
கருவாடு மீனாகாது.. கறந்த பால் மடிபுகாது.. காகிதப்பூ மணக்காது, காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று அண்ணன் காளிமுத்து அவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை காங்கிரஸ்க்கு மட்டுமல்ல.. திராவிட இயக்கங்களுக்கு எதிரான எவருக்கும் பொருந்தும்
இந்த வரலாறெல்லாம் மீன்சட்டிக்கு தெரியாது
உங்களுக்கு ஆலோசனை கூறும் கராத்தே தியாகராஜனை கேளுங்கள் பெற்ற தாய் சாவுக்கு கூட வராமல் எங்கு போய் எதற்கு ஒழிந்து கொண்டார் என்று
ஏ சி சண்முகத்தை கேளுங்கள் முதன் முதலில் எம்.எல்.ஏ.எலெக்‌ஷனில் நிற்கும் பொழுது நண்பரிடம் கடன் வாங்கி டெபாசிட் கட்டினீர்களாமே.. இப்போது உங்களிடம் பல்லாயிரம் கோடி பணம் எப்படி வந்தது..கல்வி தந்தை ஆனது எப்படி..அரசு நிலத்தை அக்கிரமித்தது எப்படி என்று கேளுங்கள் மீன்சட்டியாரே..
மூணாயிரம் ரூபாய் சம்பளத்தில் தினமலரில் வேலைக்கு சேர்ந்த ரங்கராஜ் பாண்டே கையில் இப்பொழுது சில நூறு கோடி அதையும் எப்படி என்று கேளுங்கள் மீன் சட்டியாரே..
எந்த சிறு தயாரிப்பாளருக்கும் தேதி கொடுக்காமல் பாகாசுர சினிமா கம்பெனிகளுக்கு தேதி கொடுக்கும் மீன்சட்டியாரே.. நீங்கள் தமிழக மக்களுக்காக வடிக்கும் கண்ணீருக்கு பெயர் முதலைக் கண்ணீர்
தமிழன் என்றொரு இனம் உண்டு அதற்கு இன்னொரு பெயரும் உண்டு.அதன் பெயர் "#திராவிட_இனம்
இனிமேத்தான் தரமான சிறபான சம்பவங்கள் எல்லாம் நடக்கப்போகுது..மீன்சட்டியாரே
திராவிட இனத்தின் ஆட்டத்த இனிமேத்தான் பாக்கப் போறீங்க..#கெய்க்வாட்
நாங்கள் திராவிட கட்சியினர் ஆட்டுக்கறிக்கு அடிச்சுக்குவோம்..கோழிக்கறிக்கு கூடிக்கிருவோம் தெரியுமா #சிவாஜிராவ்
2021 - ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அற்புதங்களையும்..அதிசயங்களையும் நிகழ்த்தி காண்பிக்கப் போறாங்க #மீன்சட்டியாரே
நீரே சொன்னா மாதிரி #வேங்கை மவனே நீர் ஒத்தேலதாம் நிக்கப்போறீரு
#இன்றுவரை வெளிப்படையாக தமிழக நன்மைக்காக எந்த குரலும் வெளிவந்ததில்லை..மாறாக எதிர்ப்பு தான் ரஜினியிடமிருந்து வரும்
ஸ்டெர்லைட் பிரச்சினை உள்ளங்கை நெல்லிக்கனி
அதற்கு சில வருடங்கள் முன்பு காவிரி நீரை திறந்து விடாத கர்நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கமலஹாசன் திரைப்படத்துறையினர் கர்நாடகாவுக்கு நெய்வேலியிலிருந்து மின்சாரம் கொடுக்ககூடாது என்ற கோஷத்துடன் நெய்வேலிக்கு சென்று போராட்டம் நடத்தினர்
இப்போரட்டத்திற்கு ரஜினிகாந்த் செல்லவில்லை.அதுமட்டுமல்ல நாம் கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வேண்டுமென்று மட்டும் கேட்க வேண்டும்,மாறாக மின்சாரம் கொடுக்க கூடாது என்று போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறியதுடன்
மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் காவிரி நீரை திறக்ககோரி உண்ணாவிரதம் இருந்தார்
பாம்பும் சாகக்கூடாது..கம்பும் ஒடியக்கூடாது..என்ற ரீதியில் ரஜினி உண்ணாவிரதம் இருந்தார் -கர்நாடக பாசம்
கன்னடக சினிமா நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது..அண்ணன் நக்கீரன் கோபாலை கையில் பிடித்துக் கொண்டு அன்றைய முதல்வர் கலைஞர் வீட்டுக்கு நடையாய் நடந்தார் ரஜினி
தன் சொந்த பணம் பல கோடியை ராஜ்குமார் மீட்புக்காக ரஜினி கொடுத்தார் என்பது ஆப்த ரிக்கார்டு ரகசியம் - இனப்பாசம்
திராவிட இயக்கங்களை அழிப்பேன் என்று கூறுபவர்கள் மட்டுமே ரஜினியின் நண்பர்கள் - அவரது கொள்கையும்.. குறிக்கோளும்.. அதுதான் - இதோ ஆதாரத்துடன்
கடந்த 25 ஆண்டுகளாக ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய திரைப்படம் இதுதான்
அவரது பின்னால் பாஜக இல்லை..ரஜினியின் கொள்கைக்கு - குறிக்கோளுக்கு பின்னால் பாஜக உள்ளது
அவரது கொள்கைக்கு உடன் பட்டால் காங்கிரஸையும் ஆதரிப்பார்
ரஜினியின் இந்த தீவிரவெறி தான்..அதை எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம் தான் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள்
நடிகர் விவேக்கின் அறிவைப் பார்த்து அவர் பிராமணர் என்று கருதினேன் என்று ரஜினி பேசியதும்
துக்ளக் விழாவில் பெரியாரை வம்பிக்கிழுத்து, ராமர்- சீதையை துணைக்கழைத்ததும் ரஜினியின் குறிக்கோளின் விளைவுகள் தான்
ஆளும் அரசையும் - எதிர்கட்சியையும் நேற்று எதிர்த்தது பேசியது ஊழலை ஒழிக்க அல்ல..இரண்டும் திராவிடக் கட்சிகள் என்பது தான்
கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி..குழப்பம்.. சிறுபான்மையினரின் அச்சம்..பாதுக்காபின்மை,நாடு முழுவதும் பாலியல் வன்முறை, வங்கிகள் திவால்,கடன் வாங்கியவர்கள் ஓட்டம்..
நித்யானந்தன், கல்கி சாமியார்கள் ஓட்டம் இதெல்லாம் நடந்தது ரஜினிக்கு தெரியாதா..!?
தெரியும் இதையெல்லாம் செய்தது திராவிடக்கட்சிகள் அல்ல அது திராவிட எதிர்ப்பாளர்களின் ஆட்சி அதனால் ரஜினி பேச மாட்டார்
📰#காகிதம்_ராஜன்

No comments:

Post a Comment