Wednesday 18 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஓடு அல்லது போராடு......
உலகப் புகழ் பெற்ற சிறுகதை ஒன்று
உண்டு . ஒரு பெரிய மீன், சிறிய மீன்
ஒன்றை உண்ண முயற்சிக்கிறது.
அப்போது அந்தச் சிறிய மீன், நான்
உனக்கு என்ன கெடுதல் செய்தேன்
ஏன் என்னை விழுங்கப் பார்க்கிறாய்
என்று கேட்கிறது.
எனக்கு எந்தக் கெடுதலும்
செய்யவில்லை. ஆனாலும் *எனக்கு உணவு வேண்டுமே?* மகரயாழ் அதற்காகத் தான்
உன்னை விழுங்கப் பார்க்கிறேன்
என்கிறது பெரிய மீன்.
*༺🌷༻*
ஆனாலும் இது என்ன நியாயம் என்று
வாதம் புரிகிறது சின்ன மீன். அதற்குப்
பெரிய மீன், நிதானமாகச் சொன்ன
விடை தான், இன்றும் ஒரு பெரும்
தத்துவமாகப் போற்றப்படுகிறது.
*༺🌷༻*
இதோ பார், வெறுமனே பேசிக்
கொண்டிருப்பதில் எந்தப் பயனும்
இல்லை. உனக்கு இரண்டே வழிகள்
தான் உள்ளன. உன்னை நீ
காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
என்றால், எப்படியாவது இந்த இடத்தில்
இருந்து தப்பித்து ஓடி விடு.
இல்லையானால், என்னை விழுங்கி
விடு இரண்டையும் விட்டு விட்டு,
பேசிக் கொண்டிருக்காதே என்பது
தான் அது சொன்ன விடை.
*༺🌷༻*
உயிர் வாழ்தலுக்கான போராட்டம்
எல்லா உயிரினங்களிடத்தும்
நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
*༺🌷༻*
*ஓடு அல்லது எதிர்த்துப் போராடு என்பதே இயற்கையின் கட்டளை*
*🌴வாழ்க்கையே போர்க்களம்*
*🌴வாழ்ந்து தான் ஆகனும்*
*🌴போர்க்களம் மாறலாம்*
*🌴போர்கள் தான் மாறுமா..*

No comments:

Post a Comment