Monday 23 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மூன்று மணி நேரத்துக்கு முன்பு தான் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் தொற்றுநோய்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனது கல்லூரித் தோழனிடம் பேசினேன். அவனது முதல் வாக்கியமே 'ராஜேந்திராஜி , இந்த மோடி ஒரு தலை சிறந்த மனிதரப்பா' என்பதுதான். ' அதில் சந்தேகமில்லை ஆனால் இப்போது அதற்கென்ன ?' என்றேன். 'நாங்கள் 30 வருடங்களாக அமெரிக்காவில தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால் இந்த 'ஒரு நாள் கர்ஃப்யூ'(ஊரடங்கு) எங்கள் மூளைக்கு எட்டவேயில்லை.'என்றான். ' 'மதச்சார்பின்மைவாதிகள்,இடதுசாரிகள்,முஸ்லிம்கள்,டுக்டே டுக்டே கும்பல்(நாட்டைத் துண்டு துண்டாக்க வேண்டும் என்பவர்கள்) , நகர்ப்புற நக்சல்கள், விருதைத் திரும்ப அளிக்கும் நபர்கள்(நாட்டில் சகிப்புத் தன்மை இல்லையென்று கூறி) ,என் டி டிவி போன்ற மோடியைக் கேலி செய்யும் கூட்டத்துடன் நீயும் சேர்ந்து விட்டாயா? 'என்றேன் நான். 'அய்யோ,அப்படியெல்லாம் இல்லை, நானும் எனது குடும்பத்தினரும் 19 வருடங்களாக அமெரிக்கக் குடிமக்களாக உள்ளோம்.எங்களது குடும்ப வருமானம் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல்.ஆனால் எங்கள் மனமெல்லாம் இந்தியாவில்தான் உள்ளது'என்றான். 'மோடி அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கை மற்றும் முடிவுகளை- அவற்றால் இந்தியாவுக்கு நன்மை விளையுமா , மக்களுக்கு நல்லதா என்று- நான் அலசி ஆராய்வேன். மோடியின் 'ஒரு நாள் ஜனதா கர்ஃப்யூ '( சுய விருப்ப ஊரடங்கு) என்ற ஐடியாவைப் பலர் கேலி செய்வதையும் நான் பார்க்கிறேன். ஆனால் மோடி அவர்களின் இந்த யுக்தியைப் பற்றி விவாதிக்க எங்களது ஆய்வகத்தில் மிகப் பெரிய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவின் 45 நிமிடக் கூட்டத்துக்கு ஏற்பாடாகியது. .இந்த 45 நிமிடக் கூட்டம் மூன்று மணி நேரம் நீண்டது என்றால் நீ ஆச்சரியப்படுவாய்.' 'தொற்று நோய்களின் மீது, குறிப்பாக கொரோனா தொற்றின் மீது இந்த 'ஒரு நாள் ஊரடங்'கின் தாக்கம் விவாதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் மனித உடலுக்கு வெளியே 12 மணி நேரத்துக்கு மேல் உயிரோடு இருக்காது என்பதால் உலகின் ஒவ்வொரு மனிதனையும் 12 மணி நேரத்துக்கு இதன் தொடர்பிலிருந்து விலக்கி விடுவது இது மேலும் பரவுவதைத் தடுக்கும் சிறந்த வழியாகும என்பது அனைத்து விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாக இருந்தது. இந்நிலையில் வைரஸ் படிந்திருக்கக் கூடிய கதவுக் கைப்பிடிகள், கரன்சி நோட்டுகள்,கோப்புகள், கூரியர் பார்சல்கள்,வண்டிகளின் ஸ்டியரிங் வீல்கள்,பேனாக்கள் போன்றவை நமது தொடர்பிலிருந்து துண்டிக்கப்படுகின்றன. ஆக மோடி அவர்களின் யுக்தியால் ஒரு ரூபாய் செலவில்லாமல் வைரஸ் அழிக்கப்படும்; இந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைகள் தடைபடாது; நாடு வைரசிலிருந்து விடுதலை பெறும்.' 'இத்துறையிலுள்ள மாபெரும் விஞ்ஞானிகளின் மூளைகளில் கூட இத்தகைய யுக்திகள் தோன்றவில்லை.இந்த யுக்தி மோடி அவர்களின் ஆலோசகர் ஒருவரால் கூறப்பட்டிருந்தால் அவர் நோபல் பரிசு பெறத் தகுதி உடையவராகிறார்.ஆனால் இது மோடி அவர்களின் மூளையில் உதயமாகிய ஒன்று என்றால் தொற்று நோய் சிகிச்சை தொடர்பான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்கலாம். ' என்று முடித்தான். எனக்குப் பேச நா எழவில்லை. இங்கே என்னடாவென்றால் ஏராளமான எனது நாட்டு மக்கள் 'படிக்காதவர்' என்றும், வசைபாடியும் மோடி அவர்களை அவமானப் படுத்துகின்றனர்! ( வாட்ஸ் அப் ஆங்கிலப் பதிவின் பார்வேர்ட்) தமிழில்:இரா.ஶ்ரீதரன்

No comments:

Post a Comment