Monday 16 May 2022

கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

 கரூர் கொள்ளுந்தண்ணி பட்டி, (தடிகம்பட்டி) கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா இன்று காலை அதன் தலைவர் கே. தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது, செயலாளர் பி. கலையரசன், பொருளாளர் எம். விஜயகுமார், இயக்குநர் இளமாறன் முன்னிலை வகித்தனர். முதல்வர் டி. திருப்பதி ஆண்டறிக்கை வாசித்தார், பேராசிரியர் கே. திவ்யா வரவேற்புரை ஆற்றினார்.

மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் மாணவர்கள் வாழ்வில் நகைச்சுவை என்ற தலைப்பில் 57 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினார்.
சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா, திரைப்பட நடிகர் கண்ணன், சின்னத்திரை பெரியதிரை நட்சத்திரம் ஆனந்தி, துணை இயக்குநர் ராமகிருஷ்ணன் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
மாணவர்களின் அற்புதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
35 இயக்குநர்கள் இணைந்து இந்தக் கல்லூரியை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மற்றும் உள்ளாட்சி பதவி வகிக்கும் பிரதிநிதிகளுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.
முற்றிலும் விவசாயப் பகுதியான இங்குள்ள மாணவர்களுக்கு உலகத் தரமான கல்வியை வழங்கி வருகின்றனர்.
முனைவர் ஏ. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கோவை தொழிலதிபர் தேவதாஸ் தொகுத்து வழங்கினார்.
வாழிய கிராமப்புற கல்விப் பணி.
























No comments:

Post a Comment