Friday 13 May 2022

வெற்றிக்கான ஆரம்பம் முயற்சி.

 வெற்றிக்கான ஆரம்பம் முயற்சி.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்திப் பயணித்தால்
அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
’முடியாது என்பதை முடியும்’’ என்று சிலர் நிகழ்த்திக் காட்டிடக் காரணம் அந்தச் செயல் நிச்சயமாக நிகழும் என்பதை அவர்கள் மனதளவில் முழுமையாக நம்பி, அனுபவித்துப் பார்ப்பதால் தான்..
ஆனால் மற்றவர்கள் அவர்கள் சென்ற ஆழமான நினைவுகளுக்கு, கற்பனைகளுக்கு, முயற்சிகளுக்குச் செல்லத் தயாராக இல்லாததே அதை முடியாது என்று சொல்லக் காரணம் ஆகிறது..
‘ஸ்னோ ஒயிட்’’ என்ற படத்தில் மையக் கருத்தினை வால்ட் டிஸ்னி வெளியிட்ட போது அது
முட்டாள்தனமானது, நிச்சயம் வெற்றி பெறாது என்று பல்வேறு நிபுணர்களும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டார்கள்..
ஆனால் அந்தக் கருத்துக்களை புறம்தள்ளி விட்டு அதைப் படமாக்கினார் வால்ட் டிஸ்னி.அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது..
டிஸ்னி லேண்ட் திட்டத்தை வால்ட் டிஸ்னி வெளியிட்ட போதும் இது கற்பனைத் திட்டம் என்றும், இது படுதோல்வி அடையும் என்றும் பல பேர் கிண்டல் செய்தார்கள்.
ஆனால் அதை உருவாக்கிய போது உலகமே வியக்கும் அற்புதமாக அது உருவானது..
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சம் அடையாதீர்கள்.
தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது.
போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
Bsraja Raja, Shiva Sankar and 1 other

No comments:

Post a Comment