Wednesday 25 May 2022

வாய்ப்புகளால் ஆனதே வாழ்க்கை.

 வாய்ப்புகளால் ஆனதே வாழ்க்கை.

நிகழ்வுகளையும் நினைவுகளையும் கொண்டாடுங்கள். அப்படிக் கொண்டாடப்படாவிடில் அது உங்களைக் கடந்து போய்விடும். வாழ்வு எப்போது கொண்டாட்டமாக உருவெடுக்கிறது? ஒவ்வொருவரும் தம் ஆற்றலை உணரும்போதுதான்.
அதே போல் வாழ்வில் முடிவுகள் எடுப்பதென்பது கொஞ்சம் கடினம்தான். நாம் எடுக்கும் முடிவுகள் சாதகமாகவோ பாதகமாகவோ நம்மைப் பாதிக்கும். இன்றைய உடையின் நிறம் என்ன என்பதிலிருந்து, நமக்குத் தேவையான பொருள்கள் வாங்குவது வரை முன்முடிவுகளுடனே பயணிக்கிறோம். முடிவுகள் குறித்த நம்பிக்கையின்மையே மனித ஆளுமையைப் பெரிதும் பாதிக்கிறது.
இதிலிருந்து வெளிவர ஒவ்வொரு மனிதரும் தம் சுயஆற்றலை உணர வேண்டும். அப்படி உணரும்போதுதான் வாய்ப்புகளைத் தேடவும் உருவாக்கவுமான திறன் பிறக்கும். வாய்ப்புகளால் ஆனதே வாழ்க்கை. ஒன்று இல்லையெனில் மற்றொன்று. சரியான முறையில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிறருக்குத் தேவைப்படும் சமயத்தில் ஆலோசனைகளை வழங்குங்கள். ஆனால் அவை நிச்சயம் பின்பற்றப்படும் என எதிா்பாா்க்காதீா்கள். எதிா்பாா்த்து ஏமாந்தால்தான் கோபம் வரும். அதனால் நம்மால் கொடுக்க முடிந்தததைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாகப் பயணிப்போம்.

No comments:

Post a Comment