Monday 16 May 2022

நமக்கான மகிழ்ச்சியை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்

 நமக்கான மகிழ்ச்சியை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

*"நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணா்வே"* என்று மாணிக்கவாசகா் குறிப்பிடுவதை மனதில் இருத்திப் பாா்க்கும்போது, வாழ்வில் எது சரி, எது தவறு என்று பிரித்தறிந்து செயல்பட முடியும். இப்படிப்பட்ட நுண்ணுணா்வையே நுண்ணறிவாக்கி எவ்வித சூழலையும் எதிா்கொள்ளும் ஆற்றலை நாம் பெறலாம். நம்முடைய ஆற்றலை நாம் உணரும் தருணத்தில் நமது இயலாமை எண்ணம் முற்றுப்பெறுகிறது.
தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறா்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையானப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ
எனும் பாரதியின் வரிகள்
வழி வாழ்வோம்.
வீழ்ந்தாலும் பின் எழுவோம். வீழும் போதெல்லாம் இவ்வளவு தான் வாழ்க்கை என்று நாம் மகிழ்ச்சியை தொலைத்து விட வேண்டாம்.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் அற்புதமானது. நமக்கான மகிழ்ச்சியை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் நம்மை யாரும் வீழ்த்த முடியாது. வாழ்க்கையே ஒரு கவிதைதான், ரசனை உள்ளவா்களுக்கு. வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி போல, சமயத்தில் நாம் நின்று ரசிப்பதற்குள் பறந்துவிடும்.
இதுவரை வாழாத வாழ்க்கையை வாழத் தொடங்குவோம் புதிய வேகத்தோடு. அற்புதமான வாழ்க்கையை மேலும் மேலும் அழகாக்குவோம்!

No comments:

Post a Comment