Monday 16 May 2022

புதிய வரலாறு படைத்துள்ள தம்பி பழ.இராமசாமி.

 புதிய வரலாறு படைத்துள்ள தம்பி

பழ.இராமசாமி.
தமிழும் சைவமும் தனது இரு கண்களாகக் கருதும் நகரத்தார் சமூகத்தின் சிறப்புக்கு சிறப்புச் சேர்க்கும் வண்ணம் நமது ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் பேராற்றல் மிக்க தலைவர், மூத்த வழக்கறிஞர் பழ. இராமசாமி இன்று காலை மனிதத்தேனீ யை திருநகர் இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மகிழ்ந்த தருணம்.
அருகில் ஷீலா இராமசாமி, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார் உள்ளனர்.
நீண்ட காலமாக மீட்கப்பட வேண்டிய ரூ 240 கோடி மதிப்பிலான வாரணாசியில் உள்ள சிக்ரா நந்தவனம் சொத்துக்களை அளவற்ற அயராத முயற்சியை பல கோணங்களில் செய்து வெற்றிக் கனியை வழங்கிய கோட்டையூர்
மு. சொ. அழகப்பன் மற்றும் டி எஸ் பி அரிமளம் முத்துக்குமார் அவர்களின் துணையுடன்
மேலாண்மைக் கழகத்தின் நிர்வாகிகளுடன் மீட்டெடுத்த செம்மல் நமது அருமை இளவல், வழக்கறிஞர்
பழ. இராமசாமி.
கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் சட்டப் போராட்டம், பல முனை முயற்சி இதனையெல்லாம் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி மற்றும் உத்திரப்பிரதேச எளிமையான முதல்வர் யோகிஜி ஆகியோரிடம் மு. சோ. அழகப்பன் அவர்கள் எடுத்துச் சொல்லி இன்று ஒரு சதுர அடி நிலம் கூட சிந்தாமல் சிதறாமல் நம் வசம் ஆகியுள்ளது.
இது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சரித்திரச் சாதனை.
இதில் களத்தில் நின்று பேருதவி புரிந்த குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், செயலாளர் காரைக்குடி ஆர்எம். லெட்சுமணன், துணைச் செயலாளர் தேவகோட்டை எஸ் எம். சொக்கலிங்கம், பொருளாளர்
நாச்சியாபுரம் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பணியை நன்றியுடன் பார்க்கின்றோம்.
வாழிய மீட்புச் செம்மல்களின் பணி.





No comments:

Post a Comment