Monday 30 May 2022

உழைப்பும் தன்னம்பிக்கையும்.

 உழைப்பும் தன்னம்பிக்கையும்.

மற்றவர்களின் சோதனையான நேரங்களில் அவர்களுக்கு நாம் தரும் ஊக்கமே வெற்றிக்கு மருந்தாக அமைகின்றது.
ஊக்கமும்,பாராட்டும் தரப்படுகின்ற எந்த மனிதரும் தோற்க முடியாது.
டென்னிஸ் விளையாட்டில் சாதனை புரிந்து கொண்டு இருந்த போது ரேன்டி வாட்டர் என்பவர் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார்..இந்த நிகழ்வினால் அவர் தன வலது கையை இழந்தார்.
அப்போது அவரது பள்ளிக்கூடப் பயிற்சியாளர் ‘’வலது கை போனால் என்ன? இடது கை இருக்கிறது..
அதைக் கொண்டு நீ விளையாடலாம்.
உனக்குள் நிறைய திறமைகள் இருக்கிறது,,அது எனக்குத் தெரியும் என்று சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார்.
அவரின் மற்ற நண்பர்களும் அவரை உற்சாகப் படுத்தினார்கள். அவர்களது உற்சாகமான ஊக்கம் அவருக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது.
கடினமாக தன் இடது கையினால் பயிற்சி செய்து மனவுறுதியுடன் விளையாடி ஏராளமான பதக்கங்களையும்,
வெற்றிகளையும் டென்னிஸ் விளையாட்டில் பெற்றார்.
பிறரின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகப் படுத்துங்கள்,
மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கம் அளிக்கும் போது அவர்களின் சுயமதிப்பைப் பெறுக்குகிறீர்கள்,
தன்னம்பிக்கையை அதிகப்படுத்துகிறீர்கள், அவர்களை உழைக்கத் தூண்டுகிறீர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கிறீர்கள்.
எனவே ஊக்கம் அளிப்பவராகவே இருங்கள், எப்போதும்.

No comments:

Post a Comment