Friday 22 April 2022

நாட்டு நலப்பணித் திட்டம் தேனி மாவட்டம் சார்பில் ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம்.

 நாட்டு நலப்பணித் திட்டம் தேனி மாவட்டம் சார்பில் ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம்.

இன்று காலை தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் முதன்மைக் கல்வி அலுவலர், முனைவர் ச. செந்திவேல் முருகன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.
எஸ்யூஎம் பள்ளிகளின் தாளாளர் எம் எஸ். பிரபாகர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை தலைவர் கேபிஆர். முருகன், செயலாளர் டி. ராஜ்மோகன், பொருளாளர் எம். பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் வாழ்க்கை என்பது அற்புதம் என்ற தலைப்பில் 44 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினார்.தனது உரையில் கல்வியின் பயனே நாட்டு நலப் பணிகள் தான், அதற்குள் நமது வீட்டு நலனும் உள்ளது. இந்தப் பயிற்சியால் புதிய சிந்தனை, உலகத்திற்கு ஏற்ப மாற்றம், தலைமைப் பண்பு, கீழ் படிதல், கடின உழைப்பு, பன்முக மனிதர்களின் தொடர்பு உள்ளிட்ட பயன்கள் விளையும் என்றார்.
பங்கேற்ற அனைத்துப் பள்ளி ஆசிரியர்களிடம் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் துணிப் பைகளை வழங்கினார்.
முன்னதாக முனைவர் ரேவதி சுப்புலட்சுமி வெற்றிக் கொடி கட்டு என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் அரசின் வழிகாட்டுதல்படி நல்ல தரமான மஞ்சள் துணிப்பை வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நேரு ராஜன் மற்றும் தலைமை ஆசிரியர் தினகரன், நல்லாசிரியர் சரவணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.














No comments:

Post a Comment