Thursday 21 April 2022

உறுதியும் சிந்தனையும்.

 உறுதியும் சிந்தனையும்.

உலகில் யாரலும் செய்ய முடியாது என்று கைவிட்ட செயல்களைச் சிலர் நிறைவேற்றிக் காட்டியது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மட்டும் அல்ல.. அதன் மீது உள்ள தணியாத 'ஆர்வம்''தான்..
எடுத்த செயலில் ஒருவரிடம் ''ஆர்வம்'' இருந்து விட்டால், ஒவ்வொரு நாளும் அவர் லட்சியத்தை நெருங்கிக் கொண்டு இருப்பார் என்பது திண்ணம்..
வாழ்வின் வெற்றி என்பது, ஒருவரின் செயலில் காட்டும் முயற்சி மட்டும் போதாது. அதன் மீது மிகுந்த ஆர்வத்தைப் பொறுத்தது.
பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி ஒரு நாவல் ஆசிரியரும் கூட..அவர் அறுபத்தேழு நாவல்களை எழுதி உள்ளார்..
ஒரு முறை செய்தியாளர்கள் அவரிடம்,’’ எழுத்தில் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் எப்படி ஏற்பட்டது? என்று வினவினார்கள்..
அதற்கு அவர் சொன்னார்..’’எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.. படிப்பதற்கு புத்தகம் ஏதும் கிடைக்கா விட்டால், அதற்காகவே நானே நாவல் எழுதிப் படிக்க ஆரம்பித்து விடுவேன்..
அப்படியே எழுதி,எழுதி எழுத்தாளராகி விட்டேன் என்றார் பெஞ்சமின் டிஸ்ரெலி..
இரத்தத்தில் உறுதியும், நெருப்பும் கொண்டு, சிந்தனை வேகமும்,, ஆர்வமிக்க மனிதர்கள் தான் உலக ஓட்டத்திற்கு காரணமாக இருக்கின்றார்கள்..
அரை மனமுள்ளவர்கள், குறிக்கோளற்ற இளைஞர்கள் , வாழ்க்கையென்னும் கடலிலே அடித்துச் செல்லப்பட்டு அவதிக்கு உள்ளாகிறார்கள்..
ஆம் நண்பர்களே
'ஆர்வம்’’’ என்பதற்கு நிகரானது வேறு எதுவும் இல்லை..
ஆற்றலைத் தருவது ஆர்வம்; ஆர்வத்தைத் தருவது வாழ்க்கையின் மீது ஏற்படும் ஆசை.
ஆசைகள் ஆர்வங்களாக மாற வேண்டும். ஆர்வங்கள் அயரா உழைப்புக்களாக மாற வேண்டும்
விடாமுயற்சியும், செயலில் ஆர்வம் இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்.

No comments:

Post a Comment