Monday 11 April 2022

பிரம்மிப்பான கலை நயம்

 பிரம்மிப்பான கலை நயம்

இன்று சித்திரைத் திருவிழா
திருவீதி உலா வரும்போது சொக்கநாத பெருமான்
#முகலாய #கிரீடம் என புதிய வடிவில் ஒரு கிரீடத்தை அணிந்து இருந்தார்!
முகலாயருக்கும் மீனாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை - புதிய கிரீடம் காணிக்கை அளிக்க எண்ணி 1800 களில் வடிவமைக்கப்பட்ட கிரீடம் என எங்கோ படித்த செய்தி!
மாலிக் கபூர் முகலாயர் அல்லாதவர் தான்!
இருந்தும் அவர் வந்த போது மதுரையம்பதியே சுவர் எழுப்பி மறைக்கப்பட்ட வரலாறும் கோவிலும் ஆண்டு கணக்கில் பூட்டப்பட்டும் இருந்த கதை ஊரறியும்!
அதனால் முகலாயர்கள் காணிக்கை அளித்திருக்க வாய்ப்பில்லை - இன்று சுவாமி ஊர்வலங்கள் கிராமத்தில் நடைபெறும் போது Serial set ம் மைக்கும் ஏன் பல சமயங்களில் அலங்காரங்கள் கூட நவீன யுகத்தில் செய்யப்பட்டிருப்பது போல "மத" நல்லிணக்கம் என்கிற ஒரு கொள்கையில் கூட வடிவமைக்கப்பட்டிருக்கலாம் - மற்றப்படி அந்த கிரீடத்தின் கதை தெரியவில்லை!
இருந்தும் பழைய நகைகளில் அணிகலன்களில் இருந்த ஒரு நேர்த்தி இன்றைய புதிய அணிகலன்களில் ஏனோ இருப்பதில்லை!
காரணம்:
தொழில்நுட்பங்கள் ஆத்மார்த்தங்களை வழங்குவது இல்லை!
மற்றொன்று கடவுள் சிலையும் வெறும் அலங்காரப்பொருள் என்கிற கண்ணோட்டம்!!
வியாபாரிகளாக பூசாரிகளும் வியாபார மையமாக கோவிலும் ஆன பிறகு இவற்றை எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தான்!!
இந்த கிரீடத்தின் கதையை தேடப்போய் பழைய அணிகலன்கள் கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி!!
மீனாட்சி சொக்கநாதரின் நகைகளும் கிரீடங்களும் எத்தனை அழகு!!
நன்றி.......
#வேகவதியின் எழுத்து
படங்கள் : இணையம்
🛞©️🛞©️🛞©️🛞©️🛞©️🛞©️🛞©️🛞©️🛞©️🛞©️🛞©️🛞
மொகலாய க்ரீடம் !!!
மதுரை சித்திரைத் திருவிழா 2022 ஐந்தாம் திருநாளான இன்று காலையிலும் மாலையிலுமசுவாமி சாற்றிக்கொண்டு வந்த க்ரீடத்தை பற்றி பலர் என்னிடம் விசாரித்ததால் இப்பதிவை இங்கு இடுகிறேன் !!!
மதுரையில் சோமசுந்தரேஸப்பெருமானுக்கு ஏராளமான அணிகலன்களும் க்ரீடங்களும் உண்டு. அதில் ஒன்றர்க்கு முகலாய / மொகலாயக் க்ரீடம் என்று பெயர் !!
பாரத தேசத்தில் கலைகளுக்கு பஞ்சமில்லை.. ஆயக்கலைகள் 64 நான்கு என்று சொல்வோமே !!! நம் நாட்டு கலைஞர்கள் வேற்று நாட்டவர்களின் பாணியையும், அவர்கள் நம் பாணியையும் சில நுட்பங்களையும் சில சமயம் உள் வாங்கிக்கொள்வர்… இது கலைஞர்களின் சுதந்திரம் !!! க்ரியேட்டிவிட்டி .. எடுத்துக்காட்டாக நாம் பல இடங்களில் கந்தர்வர்கள் ஏஞ்சல்களைப் போன்று பூக்கொட்டுவதை பார்த்திருக்கிறோம் (நம் கல்யாண பத்திரிக்கைகளிலும் உண்டு) .. இது ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் உள்வாங்கிக்கொண்டது !!! மதுரையில் திருமலை நாயக்கர் மஹாலின் வடிவமைப்பாளர் இந்தியர் அல்ல… ஐரோப்பிய நாடுகளின் கட்டிடக்கலை பாணி அதில் பலமாக தெரியும் !!!
தென் இந்தியாவில் முகலாயர்கள் படையெடுத்து வந்து ஆட்சி செய்தவிட்டு சென்ற பின், அவர்களின் கலைகளின் பல பாணிகளை நாம் உள்வாங்கிக்கொண்டோம் !!! அதில் ஒன்று முகலாய க்ரீடம் !!! குதிரை சவாரி செய்யும் காலத்தில் இழத்து முடிந்த ஜடா பாரத்தை ஒற்றது இந்த அமைப்பு !!! இதற்கு கோவில் ரெக்கார்டிலேயே முகலாய க்ரீடம் என்று தான் பெயர் !!!
இது ஒரு மாஸ்டர் பீஸ் !!! மேல் பாகத்தில் சரம் சரமாக முத்தும், ரத்தினமும் கோற்கப்பட்டும், கீழ் பாகத்தில் முத்து, ரத்தினம், பச்சை மாறி மாறி கோற்கப்பட்டும் இருக்கும் !!! அள்ளி முடிந்து கொண்டை கச்சிதமாக நிற்க வேண்டும் என்பதற்காக நடுவில் குறுக்காக பவழம், ரத்தினம், வைடூர்யம் முதலியவையால் ஆன பெல்ட் போன்ற அமைப்பு !!! முடியை அள்ளி முடியுங்கால் முன்னாலும் பின்னாலும் சற்று தாழ்ந்து இருக்கும் என்பதால் முன்னும் பின்னும் U போன்ற வளைவும் உண்டு !!! இத்தனை அழகை உள்ளடக்கிய மாஸ்டர் பீஸ் இந்த க்ரீடம் !!!
இக்கிரீடம் மிகவும் பழையது !!! அதனால் சிறு டேமேஜ்… முத்து உதிரல் !!! எனவே கோவில் நகை காப்பகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது !!! (இஷ்டத்திற்கு கதை கட்ட வேண்டாம்) !!! அதைப்போன்று செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு யோரோ ஒருவர் செய்து கோடுத்து டூப்லிகேட்டைத்தான் இன்று சுவாமி அணிந்துகொண்டு வந்தார் !!! எண்ணம் சரியானதாக இருந்தாலும் பாசி ஊசி மணிகளும் ப்ளாஸ்டிக் கண்ணாடி கற்களும் பயன்படுத்தாது நல்முத்தும் பவழமும் பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் நன்றாக ஒரிஜினல் க்ரீடத்தை ஸ்டடி செய்து செய்துகொடுத்திருக்கலாம் !!! எணினும் அதனையும் இன்முகத்துடனே ஏற்றுக்கொண்டது சுவாமியின் பெருங்கருணையே அன்றி வேறில்லை !!!
படங்கள் : ஒரிஜனல் க்ரீடமும் டூப்லிகேட்டும் ஒரு பார்வை
Saravanapandyan Soma Sundara pandian
நன்றி வேலு மீனாம்பாள் வேலு

No comments:

Post a Comment