Wednesday 7 June 2023

கவனக் குறைவு.

 கவனக் குறைவு.

*மனம் எனும் மாயக் கோட்டைக்குள்,
பேயாய் சுற்றித் திரியும் பணம்,*
*வேண்டும் என்று
நினைக்கும் வரை தான்
இருக்கும்.*
*வேண்டாம் என நினைத்து விட்டால்,
கண்ணை மூடி முழிப்பதற்குள் காணாமல் போய் விடும்.*
*கவனம் கொண்டு செயல்படுவோம்.
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல.*
*நல்ல‌ மனம் இருந்தால்
வெற்றி நிச்சயம்*
முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள். அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
மெய்யென்று நினைத்த ஒன்று,
பொய்யென்று உணரும் தருணத்தில் ஒருவர் கற்றுக் கொள்ளும் பாடம் மிக வலிமையானது.
பள்ளமறியாமல் தடுக்கி விழுவது தவறில்லை. மீண்டும் அந்த இடத்தை எச்சரிக்கையோடு கடக்க முயற்சிக்காமல் கவனக் குறைவாக இருப்பதே மாபெரும் தவறு.
விழும்போது நகைப்புக்குரியவராக விழுந்தாலும், எழும் போது வியப்புக்குரியவராக எழவேண்டும்.

No comments:

Post a Comment