Friday 16 June 2023

நிர்ப்பந்தம் நிதானம்.

 நிர்ப்பந்தம் நிதானம்.

தானே ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை
நிர்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை
ஒரு மாணவன் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப முதலே நம்பிக்கையுடன் அன்றாடம் படித்தால் அது தானாக ஏற்படுத்தி கொள்ளும் நம்பிக்கை. தேர்வு நெருங்கும் சமயத்தில் குறைந்த காலத்தில் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் படிப்பது நிர்பந்தத்தால் வரும்.
நம்பிக்கையின் வலிமையை நம்மைச் சுற்றி நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம்.
ஒரு நாள் விட்டிற்கு பசியுடம் வந்தேன் வீட்டில் எல்லோரும் பாட்டி வீட்டிற்குச் சென்று இருந்தார்கள். சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்த்தேன் தோசை மாவும், சட்டினியும் இருந்தது. சரி தோசை சுடலாம் என்று முதல் தோசை ஊற்றினேன். அந்த தோசைக் தோசைக் கல்லின் மீது எப்படித்தான் காதல் வந்தது, கல்லை விட்டு பிரியாமல் ஒட்டிக்கொண்டது. ஒரு வழியாக சுரண்டி எடுத்த பிறகு அடுத்த தோசை ஊற்றினேன்.
அதை தோசை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அதை அதிசய பொருட்களின் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும், அப்படி இருந்தது. உணவகத்தில் போய் சாப்பிடலாமா என்ற எண்ணம் கூட வந்து விட்டது. ஆனால் கையில் பணம் இல்லை. அடுத்த தோசை ஊற்றினேன், அது அறையும் குறையுமாக இருந்தது. அடுத்த தோசை நன்றாக இருந்தன. வழக்கமாக 5 தோசை சாப்பிடும் நான் அன்று 7 தோசை சாப்பிட்டேன். ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் வந்தது. வயிறுடன் சேர்ந்து மனதும் நிறைந்தது.
இதே போல் தான் நமது வாழ்க்கையும் நமது வேலைகள் ஆரம்பத்தில் கஷ்டமானதாகவும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கும். நம்பிக்கையுடன் நிதானமாக செயல்பட்டால் அவைகள் சாதரணமானதாக மாறிவிடும்.
இன்னொரு சம்பவம் என்னுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விட்டார்கள். ஒருவனுக்கு சாதாரண காயம் இன்னொருவனுக்கு சற்று காயம் அதிகம்.
இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டனர். சற்று காயம் பட்டவன் ஒருவாரத்தில் இயல்பாக எங்களுடன் விளையாட வந்து விட்டான். சாதரண காயம் பட்டவன் இரு வாரத்திற்குப் பிறகுதான் இயல்பாக விளையாடுவதற்கு வந்தான். காரணம் விசாரித்ததில் ஒரு உண்மை புரிந்தது.
அதிக காயம் பட்டவன் தன்னுடைய காயம் சாதரணமானது என்றும் எளிதில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். சாதாரண காயம் பட்டவனோ தன்னுடைய காயம் பெரியது என்றும் அது சரியாவதற்கு இன்னும் நாளாகும் என்றும் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கிறான்.
இதேபோலதான் நம் வாழ்க்கையும் பெரிய பிரச்சனைகளை இது சாதரணமானது எளிதில் சரி செய்யலாம் என்று நம்பினால் சரி செய்து விடலாம். சிறிய பிரச்ச்னையை இதை நம்மால் சரி செய்ய முடியாது என்று பயந்தால் அது கடினம்தான்.

No comments:

Post a Comment