Friday 23 June 2023

செயல்கள் தான் நிலைக்கும்.

 செயல்கள் தான் நிலைக்கும்.

*இது ஒரு சம்பவம்..*
அது இரவு நேரம்.
சாலையின் ஓரமாக ஒரு பன்னிரண்டு வயது சிறுவனை நிற்க வைத்து ஒரு காவல்துறை அதிகாரி, மணிக் கணக்காக ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சிறுவனும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த சாலை வழியாகப் போன பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியமாக அந்த காட்சியை பார்த்துக் கொண்டே போனார்கள்.
சில சமயங்களில் அந்த சிறுவன் ஏதோ கேட்க, அந்த போலீஸ் அதிகாரி அவனுக்கு பொறுமையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் தங்கள் மொபைலில் இந்தக் காட்சியை படமாகவும் எடுத்தார்கள்.
அப்படி எடுத்த ஒரு படத்தால்தான் இந்த விசித்திரமான விஷயம் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர். இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது அந்த நல்ல காரியம்.
ஆம். இந்தூர் காவல் நிலையத்தில் உள்ள ஒரு காவல் துறை அதிகாரிதான்
அந்தப் பகுதியில் உள்ள ஏழை மாணவன் ஒருவனுக்கு இலவசமாக டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கிறார்
தினமும் தெரு ஓரத்தில் நின்று.
அந்த காவல்துறை அதிகாரியின் பெயர் வினோத்.
அந்த 12 வயது மாணவன் பெயர் ராஜூ.
"எப்படி ஆரம்பமானது இந்த டியூஷன் "
கடந்த ஆண்டு ஒரு ஊரடங்கு மாலையில் காவல்துறை அதிகாரி வினோத்
வழக்கமான ரோந்துப் பணியில் இருக்கும்போதுதான் தற்செயலாக அந்தப் பையனைப் பார்த்தார்.
சாலை ஓரத்தில் சோகமான முகத்தோடு நின்று போலீஸ்காரர்களை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜூ.
அவனை அருகே அழைத்தார் வினோத்.
"யார் தம்பி நீ "
ராஜூ தன் கதையைச் சொன்னான்.
அப்பா ரோட்டோரம் டிபன் கடை வைத்திருந்தாராம். ஊரடங்கால் கடை மூடப்பட்டு விட்டது.
மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். ஆனாலும் இந்தச் சிறுவனுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம்.
"எதிர்காலத்தில் என்ன ஆக விரும்புகிறாய் ராஜூ "
"உங்களை போல
போலீஸ் ஆக "
வினோத்துக்கு ஆச்சரியம்.
"போலீஸ் ஆக ஆசையா "
"ஆமாம் சார், ஊரே அடங்கி ஒடுங்கி கிடக்கும் இந்த நேரத்திலும் நீங்கள் எல்லோரும் எவ்வளவு உற்சாகமாக வேலை செய்கிறீர்கள், எனக்கும் இதைப் போல சேவை செய்ய ஆசை "
"வெரிகுட்."
"ஆனால் ... ஸ்கூல் எல்லாம்
எப்போது திறக்கும் எனத் தெரியலை சார்."
"ஏதாவது டியூஷனுக்குப் போகலாமே தம்பி."
"இல்லை சார். அதற்கு ஃபீஸ்..."
"ஓ "
கொஞ்ச நேரம் யோசித்தார் வினோத்.
"ஒன்று செய்யலாம்."
"என்ன சார் "
"நாளை இதே நேரம், இரவு எட்டு மணிக்கு இந்த இடத்திற்கு வந்து விடு."
அடுத்த நாளிலிருந்து ஆரம்பமானது அந்த இலவச டியூஷன்.
டியூட்டியை முடித்து விட்டு வரும் வினோத் தினமும் அந்தப் பையனுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தார்.
டியூஷனுக்கான இடம்
காவல் நிலையத்துக்கு அந்த பையனை அழைத்து செல்ல அவர் விரும்பவில்லை.
எனவே அவர் வசம் போலீஸ் ஜீப் இருந்தால் ஏதாவது ஒரு தெரு விளக்கின் அடியில் அதை நிறுத்தி வைத்து விட்டு, ஜீப் பானெட்டிலேயே வைத்து பாடம் நடத்துவார் வினோத்.
ஜீப் இல்லையென்றால்.
ஏதாவது ஒரு ATM வாசலில்.
அல்லது தெருவில் எங்கே வெளிச்சம் இருக்கிறதோ, அங்கேதான் டியூஷன் சென்டர்.
சந்தோஷமாக படித்துக் கொண்டிருக்கிறான் ராஜூ.
அதை விட சந்தோஷமாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வினோத்.
மீடியாக்காரர்கள் காவல்துறை அதிகாரி வினோத்திடம்
கேட்டார்கள்.
"எப்படி சார் இருக்கிறது இந்த புது டியூஷன் அனுபவம் ?"
சிரித்தார் வினோத்.
ஏற்கனவே இதற்கு முன் அவர் பணி புரிந்த ஊர்களில் எல்லாம் இதே போல பலருக்கும் டியூஷன் எடுத்திருக்கிறாராம்.
அவரிடம் படித்த சில மாணவர்கள் இப்போது காவல் துறையிலும் பணிக்கு சேர்ந்திருக்கிறார்களாம்.
மகிழ்ச்சி.
நிச்சயமாக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் ஒரு மனிதர் இந்த வினோத்.
காக்கிச்சட்டை என்றாலே கடுமை என்று சிலர் நினைக்க வைக்கிறார்கள்.
ஆனால் கடவுள் கூட சில வேளைகளில் காக்கிச் சட்டை அணிந்து வரலாம்
என வினோத் போல இருக்கும் சிலர் நினைக்க வைக்கிறார்கள்.
*பல நூல் படித்து நீயறியும் கல்வி. *
*பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்.*
*பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்.*
*இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"

No comments:

Post a Comment