Saturday 10 June 2023

கற்றல் தொடர வேண்டும்.

 கற்றல் தொடர வேண்டும்.

நான் நிறையப் படிச்சிருக்கேன். என்கிட்ட இத்தனை டிகிரி இருக்கு. எனக்குத் தெரியாதது ஒன்னுமில்லைன்னு கர்வம் இருக்கா உங்களுக்கு அப்படின்னா அதை தூக்கி ஓரமா வைச்சிடுங்க.
நம்ம வாழ்க்கையில் கத்துக்குற முக்கால்வாசி விஷயங்கள் நம்ம பாடப் புத்தகத்தில் இருந்து வரதில்லை.
ஒரு சிங்கத்தை நேருக்கு நேரா பாக்கும் போது என்ன பண்ணணும்னு எந்தப் பாடப் புத்தகத்தில் சொல்லி குடுத்துருக்காங்க. பித்தோகரஸ் தியரியை வைச்சி இதை சரி பண்ண முடியுமா.
ஓடிடுன்னு மனசு சொல்லும். ஆனால் ஓடினால் கதை முடிஞ்சிடும். வைச்ச கண் வாங்காமல் சிங்கத்தையே பாக்கணும். நிக்குற இடத்தை விட்டு நகரக் கூடாது. முடிஞ்ச வரை உங்களைப் பெரிய உருவமா காட்டிக்கணும். இதுக்கு அப்பறம் சிங்கம் என்ன முடிவு பண்ணுதோ அது தான் உங்கள் வாழ்கையை தீர்மானிக்கும்.
வாழ்க்கையிலே நான் எல்லாமே கத்து முடிச்சிட்டேன்னு ஒரு தருணமே கிடையாது. எப்போ டிவிஸ்ட் அண்ட் டேர்ன்ஸ் வருமுனே தெரியாது.
உலகத்திலேயே மிக நீளமான ஆண்டீஸ் மலையிலே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகுது. மைனஸ் முப்பது டிகிரி குளிரில் காப்பாத்த யாராவது வருவாங்கன்னு காத்து கிடக்குறாங்க அந்த விபத்தில் உயிர் தப்பியவர்கள். ஆனால் அரசாங்கம் அந்த விபத்தில் எல்லோரும் இறந்துட்டாங்கன்னு நினைச்சு தேடுதல் பணியைக் கை விட்டுடறாங்க. பசியோட பல நாட்கள் காத்திருந்தவர்கள் வேற வழியே இல்லை உயிர் தப்பிக்கணும்னு இறந்தவர்களின் உடலை சாப்பிட ஆரம்பிக்குறாங்க. இருபதாம் நூற்றாண்டின் மிக பெரிய சர்வைவல் ஸ்டோரி தான் இது.
கம்ப்பர்ட் ஸோனை விட்டு ஏன் வெளியே வரணும்னு கேட்ப்பவருக்கான பதில் இது. கஷ்டங்களை பார்த்தவர்களால் சில கஷ்டமான நேரங்களில் தப்பித்துக்கொள்ள முடியும். கம்ப்பர்டாக இருந்தவர்களுக்கு அது கடினம்.
நான் ஒரு ஆண். நான் ஏன் சமைக்க கத்துக்கணும்னு சில பேர் கேட்க்கும் போது எனக்குத் தோணும். அடுத்த வேளை உங்களுக்குப் பசிக்குமா அப்ப நீங்களும் சமைக்க கத்துக்கணும். அது அத்தியாவசியமான ஒன்னுன்னு நான் நினைக்குறேன்.
நான் மெரைன் இஞ்சினியரிங் படிச்சிருக்கேன்னு சொல்லுபவரிடம் முதலில் கேட்ப்பது உங்களுக்கு நீச்சல் தெரியுமான்னு தான். பெரிய பெரிய விஷயங்களை கத்துக்கிட்டோம்னு நினைக்குற நமக்கு பேசிக்கான வாழ்க்கைக்கு தேவையானது தெரியாமல் இருக்க கூடும். அந்த சின்ன விஷயம் வாழ்க்கையில் ஆபத்தான காலத்தில் கை கொடுப்பதாக இருக்கும்.
நான் சொல்ல வர அறிவுரை, வாழ்க்கையிலே ஒவ்வொரு நிமிஷமுமே நாம ஏதாவது கத்துக்கிட்டே தான் இருக்கோம். ஏதாவது ஒரு சர்வைவல் ஸ்டோரியை கேட்க்கும் போது இந்த இடத்துல நான் இருந்துருந்தா என்ன பண்ணியிருப்பேன்னு தான் யோசிப்பேன்.
அந்த மாதிரி நேரங்களில் நாம வைச்சிருக்க டிகிரி, பணம் எல்லாம் ஒன்னுமில்லாமல் போயிடும். எல்லாமே எனக்குத் தெரியும்ங்குற மன நிலையில் இருந்து வெளியே வந்து வாழ்க்கையிலே சின்ன சின்ன விஷயங்களை கூடக் கத்துக்கங்க. நீங்க எதிர்ப்பாக்காத நேரங்களில் கண்டிப்பாக உதவும்.

No comments:

Post a Comment