Saturday 24 June 2023

பேசுகிற படி எழுதுகிற படி நாம் நடக்க வேண்டும்.

 பேசுகிற படி எழுதுகிற படி

நாம் நடக்க வேண்டும்.
பொதுவாக ஒருவர் அறிவுரை கூறுகிறார் என்றால், அதைக் கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது என்பதை மனிதர்கள் கவனிப்பார்கள்.
ஒரு சிறுவன் அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனது தாயார் அவனை நல்வழிப்படுத்த, தனது குருவிடம் அவனை அழைத்துச் சென்றார். குரு அவர்களைப் பார்த்து விட்டு, அடுத்த வாரம் வரும்படி கூறினார். தாயாரும் அடுத்த வாரம் மகனை மறுபடி குருவிடம் அழைத்துச் சென்றார். குரு திரும்ப அடுத்த வாரம் வரும்படி கூறினார். தாயார், மறுபடி அடுத்த வாரம் குருவிடம் மகனை அழைத்துச் செல்ல, குரு சிறுவனைக் கூப்பிட்டு, அறிவுரை கூறினார்.
'தம்பி. அதிகமாக சர்க்கரை சாப்பிடாதே. உடல்நலத்திற்கு தீங்கு. அளவாக சாப்பிடு' என்றார்.
என்ன ஆச்சரியம். மகன் அன்று முதல் சர்க்கரை அளவை குறைத்து விட்டான். தாயாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குருவிடம் சென்று மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துக் கொண்டார். மேலும், குருவிடம், ஏன் தாங்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே இந்த அறிவுரையைக் கூறவில்லை, என்று வினவினார்.
அதற்கு குரு, பின்வருமாறு பதிலளித்தார்.
'எனக்குமே சர்க்கரை அளவில் கட்டுப்பாடு இல்லை. அறிவுரை கூறுவதற்கு முதலில் நான் கடைபிடிக்க வேண்டும். அதனாலேயே இரண்டு வாரம் கழித்து, நான் கடைபிடித்தப் பிறகு, உபதேசம் அளித்தேன். அதன் காரணமாகவே, உபதேசம் பலனளித்தது என்றார்.
தாயும், அறிவுரையை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்துக் கொண்டார்.
இப்போது, கேள்விக்கு வருவோம். பொருளாதாரத்தில் முன்னேறாத ஒருவர், எத்தகைய கருத்து கூறுகிறார் என்பதைப் பொறுத்து மக்கள் அதனைப் பொருட்படுத்துவர்.
வள்ளலார் காசினை கையால் தொட மாட்டார். மிகப் பெரிய ஞானி. அவர் பின்னால், மக்கள் சென்று, ஜீவகாருண்யத்தை வாழ்வியலாக பின்பற்றி வருகின்றனர்.
வேதாத்திரி மகரிஷி தனது 50 வது வயதில், ஆன்மிக வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பொருளாதார வாழ்க்கையிலிருந்து விலகி விட்டார். மக்கள் அவரது உபதேசங்களைப் பின்பற்றி நடக்கின்றனர்.
எனவே, ஞானிகள் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், அவர்கள் கூறும் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒருவர் பெரிய ஞானியாக இருக்கலாம். அவரை பொருளாதாரத்தின் அடிப்படையில் அவரை மதிக்காமல் போனால், இழப்பு மதிக்காதவருக்கே.
எனவே, பொருளாதாரத்தில் ஒருவர் பின்தங்கி இருந்தாலும், அவருக்கு அறிவுரை கூறும் தகுதி இருந்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

No comments:

Post a Comment