Monday 19 June 2023

நந்தி தேவரின் சிறப்பம்சங்கள்..!!

 நந்தி தேவரின்*

*சிறப்பம்சங்கள்..!!*
நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்.. நந்தி பெருமானின் சிறப்பம்சங்கள் என்னென்ன.
👉 நந்தி சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் ஒரு காளையாக சித்தரிக்கப்படுகிறார். இவர் கைலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார்.
👉 நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
👉 நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசனின் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.
👉 நந்தி அனுமதி கிடைத்தால் தான் ஈசனின் அருளைப் பெற முடியும். எனவே தான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்" என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
👉 சிவன் கோயில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி தேவரை "தர்ம விடை" என்று சொல்வார்கள். அழிவே இல்லாமல் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம் தான் ஈசனைத் தாங்கி நிற்கின்றது.
👉 கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது.
👉 நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
👉 சிவராத்திரியின் போதும், பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர்.
👉 நந்தியின் நான்கு கால்களும் சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் ஆகிய நான்கு வகையான குணத்தை வெளிப்படுத்துவதாக ஐதீகம். சிவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.
👉 சிவாலயங்களில் உள்ள நந்தி மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி உள்ளபடி இருக்கும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவபெருமானின் ஆணைக்கேற்ப அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
👉 சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தி தான். இவரை வழிபட்டாலே சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
👉 நந்தியின் காதுகளில் நமது பிரச்சனைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார் எனபது நம்பிக்கை.
👉 பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக்கொண்டார். அதைத் தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.
👉 பிரதோஷ பூஜையில் நந்திக்குத் தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபட்டதற்கு ஒப்பாகும்.

No comments:

Post a Comment