Monday 26 June 2023

துன்பத்தைத் தூக்கி எறியுங்கள்.

 துன்பத்தைத் தூக்கி எறியுங்கள்.

*வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் நம்மைத் தொடர்வது
மிகவும் முக்கியம்.*
*ஏனென்றால் ஒரு ஈ சி ஜி யில் கூட ஒரு நேர்கோடு என்றால் நாம் உயிருடன்
இல்லை என்று அர்த்தம்.*
*மனிதன் முகம் வாடியது போல் தோன்றக் காரணம் அவனது மனம்.
கவலைகள், சிந்தனைகள், கனவுகள், இன்ப மயக்கம்
போன்றவற்றின் கனத்தால்
எப்போதும் அழுந்திக் கிடப்பதுதான்.*
*இன்பமோ துன்பமோ சற்று பொறுங்கள். அதைக் கவனித்துப் பாருங்கள். அது நகர்வதை நீங்கள் கவனிக்கும் போதே காணலாம். தயவுசெய்து துன்ப காலத்தில் இருந்து வெளியேறி. இத்தருணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.*
*பொன் பொருளை விட
மதிப்பு மிக்கது மகிழ்ச்சி. ஏனெனில் அதை யாரும் உங்களுக்குக் கடனாய்க் கொடுக்க
மாட்டார்கள்.*
*மகிழ்ச்சியாய் வாழ ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால் கவலையின்றி வாழ மூன்று வழி தான்.*
*போவது போகட்டும்,
வருவது வரட்டும்,
நடப்பது நடக்கட்டும்
என்று இருப்பது தான்.*
*காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிச் சிரிக்க பழகிக்கொண்டால் எந்தக் காயமும் பெரிதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*எத்தனை முறை உங்கள் சந்தோஷங்கள் பறிக்கப்பட்டாலும், பூத்துக் கொண்டே இருங்கள்
பூக்களைப் போல.*

No comments:

Post a Comment