Monday 19 June 2023

தூக்கிச் சுமக்க வேண்டாம்.

 தூக்கிச் சுமக்க வேண்டாம்.

சில உறவுகள் யோசித்துப் பேச
வைக்கும்
சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும்
சில உறவுகள் பேசவே யோசிக்கும்.
திரும்பிப் பாருங்கள் உங்களைக் கஷ்டப்படுத்திய நாட்களெல்லாம் கற்றுக் கொடுத்த நாட்கள் என்று தெரியும்.
அத்தகைய அனுபவங்களைச் சேமித்து வையுங்கள், இனி வரும் நாட்களில் எச்சரிக்கையோடு
செயல்பட அது உதவும்.
தினசரி நாட்காட்டி கூட வழிகாட்டியாகத் தான் இருக்கிறது
எல்லா நாளையும் நல்ல நாளாகவே எல்லோருக்கும் காட்டும்.
நேற்றைய கெட்ட நாளைக் கிழித்து விட்டு, மறந்து
இன்றைய நல்ல நாளோடு பயணத்தைத் தொடங்கு
வெற்றி நிச்சயம்.
*இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை.*
*ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கி சுமக்கின்றோம்.*
*உங்கள் மனதால் சுமக்க முடியாத சுமைகள் வாழ்வில் வரும் பொழுது அதை இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.*
*உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாகத் தெரியும்.*
*இறைவனின் கரங்களுக்குச் சென்றுவிட்டால் அனைத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன்.*
*அவரால் விதியையும் கூட மாற்ற முடியும்.*
*உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நொடி போதும்.*
*ஆகவே எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனை நம்பி..*
*இறைச் சிந்தனையுடனும், நம்பிக்கையோடும்,*
*நேர்நிலையான சிந்தனையுடனும் வாழ்க்கையை வாழுங்கள்.*
*உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.*
*இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்வதற்கு
வாழ்த்துக்கள்
*

No comments:

Post a Comment