Friday 9 June 2023

மகிழ்ச்சியான மனநிலை.

 மகிழ்ச்சியான மனநிலை.

*அனுபவத்தில் பாடம் கற்றுக் கொள்பவன் சாதாரண மனிதன். அடுத்தவனின் அனுபவத்தைப் பாடமாக எடுத்து, தன்னை நெறிப்படுத்திக் கொள்பவன் அறிவாளி.*
*ஓடுகின்ற வயதில் உட்கார நினைக்காதீர்கள்.
உட்காருகின்ற வயதில் நீங்கள் நினைத்தாலும் ஓட முடியாது.*
*வாழ்க்கை உங்கள் பாதை. உங்களுக்கான பாதை மட்டுமே.. உங்களுடன் பலர் நட க்கலாம். ஆனால் உங்களுக்காக யாரும் நடக்க முடியாது.*
*கடினமான விசயங்களை மகிழ்ச்சியான மனநிலையுடன் கடந்து செல்லுங்கள். நாளடைவில் எல்லாம் இயல்பாக மாறி விடும்.*
*விறகு கூட வீணையாய்த்
தெரியும் ரசிப்பவனுக்கு*
*வீணை கூட
விறகாய்த் தெரியும் விற்பவனுக்கு*
*பார்க்கும்
கண்களில் இல்லை வேறுபாடு
மனங்களிலே உள்ளது.*
*பாதங்கள் நடக்கத்
தயாராக இருந்தால்
பாதைகள் வழிவிடாமல்
இருக்கப் போவதில்லை.*
*ஏற்றுக் கொள்ள முடியாததைத் மாற்றிக் கொண்டு
மாற்றிக் கொள்ள முடியாததை
ஏற்றுக் கொண்டு
செயல்படுபவன்
தான் புத்திசாலி.*
*சூழ்நிலைகளைத் திறந்த மனதோடு உள்ளவாறே ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள்
அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நம்பிக்கையோடு
முன்னேறுவார்கள். *

No comments:

Post a Comment