Thursday 30 March 2023

உள்ளது உள்ளபடியே.

 உள்ளது உள்ளபடியே.

"பெரும்பாலான மக்கள் தங்கள் முன்னோக்கின் வரம்புகளை உலகின் வாம்புகளாகக் கருதிக் கொள்கின்றனர். ஒருசிலர் அவ்வாறு நினைப்பதில்லை. அவர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ஜெர்மானிய தத்துவவியலாளரான ஆர்துவர் ஷொபென்ஹவர் கூறியுள்ளார்.
இது ஓர் ஆழமான கருத்து *இக்கணத்தில் நீங்கள் பார்க்கின்ற வாழ்க்கைதான் உங்கள் எதிர்கால வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.* உங்கள் பயங்கள், குறைபாடுகள், தவறான அனுமானங்கள் ஆகியவற்றின் ஊடாக விஷயங்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும்.
நீங்கள் எந்தக் கண்ணாடிச் சன்னலின் ஊடாக உலகத்தைப் பார்க்கிறீர்களோ அந்தச் சன்னலின்மீது படிந்துள்ள கறைவயை நீங்கள் துடைத்து சுத்தப்படுத்திய பிறகு மீண்டும் அதன் ஊடாக நீங்கள் பார்க்கும்போது, முற்றிலும் புதிய சாத்தியக்கூறுகள் உங்கள் பார்வையில் படும்.
உள்ளது உள்ளபடியே நாம் உலகத்தைப் பார்ப்பதில்லை, மாறாக, நம்முடைய சொந்தக் கண்ணோட்டத்தின் ஊடாகவே நாம் அதைப் பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பல வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு மனிதனாலும் ஒரு மைல் துரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க முடியாது என்ற ஓர் உறுதியான நம்பிககை நிலவியது. ஆனால் ரோஜர் பேனிஸ்டர் அதை முறியடித்து, ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடந்த பிறகு, ஒருசில வாரங்களுக்குள் ஏராளமானோர் அவர் செய்ததை போலவே செய்து சர்தனை படைத்தனர். ஏன் ஏனெனில் எது சாத்தியம் என்பதை ரோஜர் மக்களுக்குக் காட்டினார். அந்த நம்பிக்கையின் துணையுடன் சாத்தியமற்றதைப் பிறரும் சாத்தியமாக்கினர்.
உங்களை மட்டுப்படுத்துகின்ற நம்பிக்கை எது.
எவையெல்லாம் சாத்தியமற்றவை என்று உங்களை நீங்களே நம்ப வைத்திருக்கிறீர்கள்,
உங்களால் எவற்றையெல்லாம் பெற முடியாது எவற்றையெல்லாம் செய்ய முடியாது அல்லது உங்களால் யாராக ஆக முடியாது போன்றவை குறித்து நீங்கள் எவ்வளவு பொய்யான அனுமானங்களைக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் சிந்தனைதான் உங்கள் யதார்த்தத்தை உருவாக்குகிறது. உங்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட விஷயம் நிகழாது என்று நீங்கள் நினைத்தால், அந்த இலக்கை யதார்த்தமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீங்கள் ஒருபோதும் எடுக்க மாட்டீர்கள்.
இது சாத்தியமில்லை என்ற உங்களுடைய நினைப்பு உங்களை முழுவதுமாக ஆட்கொண்டுவிடும். உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்ற குறைபாடுகள், நீங்கள் மாபெரும் சாதனைகளைப் படைக்க முடியாத விதத்தில் உங்கள் கைகளைக் கட்டிப் போடுகின்ற சங்கிலிகளாக ஆகிவிடும்.

No comments:

Post a Comment