Tuesday 14 March 2023

பயிற்சியின் பலன்.

 பயிற்சியின் பலன்.

யானைமேல் இருக்கும் மனிதன் உணரும் அகங்காரம் ஒன்றுண்டு. அவன் தன்னை ஒரு மகாராஜாவாக, சிம்மாசனம் மேல் அமர்ந்தவனாக உணர்கிறான்.
உலகம் மேம்பட உயிர்களின் மனம் மேம்பட வேண்டும். உயிர்களின் மனம் மேம்பட அறிவு மேம்படல் அவசியம். இத்தகு மேம்பட்ட அறிவுத் திண்மை புலனடக்கத்தால் சாத்தியம். ஐப்புலன்களின் உணர்வுகள் அடக்க முடியாதவை. யானையைப் போல் மலையானவை.
இத்தகு ஐம்புல உணர்வுகளை அறிவுத் திண்மையெனும் (அறிவு, மன உறுதி) என்னும் கருவியால் காப்பவனே இவ்வுலகின் விதை போன்றவன் என்கிறார்.
அங்குசம் என்னும் சிறு ஆயுதமே ஒரு பெரிய யானையை அடக்க வல்லது என்பதை நாம் உணர வேண்டும். ஆனால் ஒரு தேர்ந்த பாகனால் மட்டுமே அங்குசத்தை சரியாகப் பயன்படுத்த முடியும். ஒரு தேர்ந்த பாகன் என்பவன் பல பயிற்சிகளை கற்று (மறக்காமல்) உள்ளவன். ஆதலால் அறிவு மற்றும் மன உறுதியால் (மன பயிற்சிகளாலும்) ஐம்புலன்களை அடக்கலாம்.
துறவெனும் நிலந்தனில் துளிர்விடத் தகுந்த ஒர் முதிர்ந்த நல் வித்தாக அவன் விளங்குவனாம்.
அதாவது, தாய் ஈண்டு பிறந்து இறந்தவன் எல்லாம் மகன் அல்ல. மோட்சம் அல்லது பேரின்ப பெருவீட்டில் துளிர் விட தகுதியான முதிர்ந்த விதையானவனே மகன்.
*உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்*
*வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.*
*~ திருக்குறள்*

No comments:

Post a Comment