Friday 17 March 2023

அபூர்வப் பறவை.

 அபூர்வப் பறவை.

ஜப்பானுக்கும், அமெரிக்காவுக்கும் நடுவே மிகப்பெரிய
பசிபிக் கடல் உள்ளது.
அக்கடலின் நடுவே மிட்வே எனும் தீவு உள்ளது. முன்பு விமானங்களின் தொழில்நுட்பம் முன்னேறாத நிலையில் பசிபிக் கடலை விமானங்களால் தாண்ட முடியாது. பெட்ரோல் போட நடுவே நிறுத்தவேண்டும்.
அதனால் மிட்வே தீவில் நிறுத்தி பெட்ரோல் போடுவார்கள் அதனால் மிட்வே என பெயர்
இன்று அந்த தீவுகளின் மனித நடமாட்டத்தை முழுமையாக தடை செய்து உலகின் மிகப்பெரிய அல்பட்ராஸ் (Albatross) காலனியாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தீவில் 20 லட்சம் அல்பட்ராஸ் பறவைகள் வசிக்கிறன.
அல்பட்ராஸுக்கு ஏன் இப்படி ஒரு மரியாதை?
மிக வித்தியாசமான பறவை அல்பட்ராஸ். உலகின் மிக நீளமான சிறகுகளை கொண்ட பறவைகளில் ஒன்று. அதன் இரு சிறகுகளையும் விரித்தால், 11 அடி நீளம் வரும். ஒரு நாயின் எடைக்கு சமமான எடை கொண்ட பறவை.
இத்தனை பெரிய இறக்கைகளை வைத்துக்கொன்டு விண்ணில் பறப்பதே சிரமம். மலையில் ஏறி காற்று வேகமாக அடிக்கும் சமயம் ஏரோப்ளேன் மாதிரி வேகமாக ஓடி, எழும்பி குதித்து டேக் ஆஃப் ஆகி தான் அதனால் பறக்கமுடியும். இறகுகளை அசைத்து எல்லாம் பறக்கமுடியாது. அதற்கு ஏகபட்ட கலோரிகள் செலவு ஆகும்.
இறக்கையை துளியும் அசைக்காமல் கிளைடரை போல காற்றின் வேகத்தை பயன்படுத்தி பாய்மரக்கப்பலை போல விண்ணில் பறக்ககூடியது அல்பட்ராஸ். ஒருமுறை எழும்பினால் ஆறு ஆண்டுகள் அதன் கால்கள் நிலத்தில் படாது. ஆறு ஆண்டுகளுக்கு நிலத்தில் காலை வைக்காமல் காற்றை பயன்படுத்தி உலகை சுற்றி வலம் வரும். விண்ணில் பறந்தபடி கடலின் மேற்பரப்பில் இறந்து கிடக்கும் மீன்கள், கடலின் மேற்பரப்பில் காணப்படும் மீன்களை உண்டபடி வலம் வரும்.
ஆனால் தரையில் இறங்கினால் நடப்பதே சிரமம். தரையில் இறங்க விமானம் இறங்குவது போல இறங்கி, நெஞ்சுப்பகுதியும், வயிறும் புல்தரையில் உராய்ந்தபடி தான் தரையில் இறங்கமுடியும். தலா ஆறு அடி நீள இறக்கைகளை மடித்தபடி நடக்க மிகவும் தள்ளாடும்.
இத்தனை கஸ்டபட்டு நிலத்தில் இறங்க ஒரே காரணம் இனப்பெருக்கம் தான். முட்டை வைத்து குஞ்சை வளர்த்துவிட்டு மீண்டும் பறந்துபோய்விடும்.
இந்த அபூர்வ பறவையை பாதுகாக்க ஒரு தீவையே ஒதுக்கிவிட்டது அமெரிக்கா. அதனுள் யாருக்கும் அனுமதி இல்லை. அல்பட்ராஸ் பறவைகளை தவிர...
நன்றி அருணாசலம் ராமநாதன்

No comments:

Post a Comment