Friday 3 March 2023

முக்கியமான குணம்.

 முக்கியமான குணம்.

எந்தக் குடும்பமும், எந்த நட்பும் அன்பு இல்லாமல் தழைக்காது. அப்படியானால், மனநலனுக்கும் மகிழ்ச்சிக்கும் அன்பு மிகமிக முக்கியம் என்பதைச் சொல்லவே வேண்டாம்.
ஆனால், “அன்பு” என்பது என்ன.
சொந்த நலனைவிட மற்றவர்களுடைய நலனில் ஆழ்ந்த அக்கறை காட்டத் தூண்டுகிற உயர்ந்த வகையான குணமே அன்பு.
அன்பை அழகாக வர்ணிக்கும் இந்த வார்த்தைகளைப் பாருங்கள்:
“அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.
எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.”
ஆம், இப்படிப்பட்ட அன்பு ஒருபோதும் ஒழிந்துபோகாது. சொல்லப்போனால், காலம் போகப்போக அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.
அந்த அன்பு பொறுமையும் கருணையும் உள்ளதாக.
மன்னிக்கும் தன்மை உள்ளதாக இருப்பதால், அது ‘எல்லாரையும் பரிபூரணமாக இணைக்கிறது.’
அன்புதான் கடவுளுடைய மிக முக்கியமான குணம்.

No comments:

Post a Comment