Monday 6 March 2023

கோவையில் நடைபெற்ற இலக்கிய விழா

 கோவையில் நடைபெற்ற இலக்கிய விழா.

நேற்று இரவு கோவை நகரத்தார் சங்கத்தின் இலக்கிய விழா அதன் மேனாள் தலைவர், குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி தலைமையில் நடைபெற்றது.
சுப்பு என்ற வள்ளியப்பன் இறைவணக்கம் பாடினார்.
தலைவர் வழக்கறிஞர் ராம. மயிலேறு வரவேற்பு ஆற்றினார். நகரத்தார் புள்ளிகள் டாட் காம் நிறுவனர் ஆறாவயல் ஓ. சோமசுந்தரம் முயற்சியில் கோவை நகரத்தார் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நகரத்தார் சங்கத்தின் முன்னோடிகள் கேஆர். மணிகண்டன், எம் எம். அசோக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நாளெல்லாம் நகைச்சுவை என்ற தலைப்பில் 69 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றுகையில்
இலக்கியமும் நகைச்சுவையும் இதயத்தை இதமாக்கும்.
நகைச்சுவையால் எல்லோருக்கும் எப்போதும் நலன் சார்ந்த பயன் ஏராளம் என்றார்.
தமிழுக்கும் இலக்கியத்திற்கும் நகரத்தார்களின் பங்களிப்பு வரலாற்றில் நிரம்ப உண்டு.
மரபுக் கவிதை, புதுக் கவிதை, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் வாழ்வியல் என பல சம்பவங்களைச் சொல்லி அரங்கம் முழுவதும் நிரம்பி இருந்தவர்களின் கரவொலியைப் பலமுறை பெற்றது குறிப்பிடத்தக்கது.
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப நமது கருத்திலும் வளர்ச்சி வேண்டும். புதுப்புது திறன்களைக் கற்றால் என்றும் புத்துணர்ச்சி தவழும்.
நமது அன்றாட பணிகளில் நகைச்சுவை உணர்வு இணையும் போது பணிகள் மிகவும் எளிதாகும் என்றார்.
நிர்வாகச் செயலாளர்
பழ. முத்து அழகப்பன் நன்றியுரை கூறினார்.
துணைத் தலைவர் எம். விஸ்வநாதன், பொதுச் செயலாளர் எஸ். சண்முகம், தேன்மொழி ராஜமாணிக்கம் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
துணைத் தலைவர் லெ. கருப்பன் செட்டியார், பொருளாளர் சொ. சொக்கலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
மேனாள் தலைவர் பிஎல். சுப்பிரமணியன் செட்டியார், மற்றும் மூத்த உறுப்பினர்கள் ஏஎல். கருப்பையா செட்டியார், தி. சுப்பிரமணியன், கண்ணப்பன் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
































No comments:

Post a Comment