Friday 17 March 2023

வலி, தயக்கம், மன உளைச்சல்.

 வலி, தயக்கம், மன உளைச்சல்.

நம் வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளினால் மனம் மிகவும் கனமாகி மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். தாங்க முடியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கின்ற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் இவை அனைத்தும் மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.
நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் சரி தைரியத்தையும் விடாமுயற்சியையும் கைவிடாதீர்கள்.
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் மிக அற்புதமான திட்டத்தை வைத்திருக்கிறார். அதை முறையே நடத்துவதற்கான வழி முறையும் அவருக்குத் தெரியும்.
தேவையில்லாமல் நாம் அவரை நிந்திக்க வேண்டாம். சந்தோசமாக இருக்கும் போது நம் கைப்பிடித்துக் கொண்டு மிகவும் நல்ல முறையில் நடத்தி வந்த கடவுளுக்கு துன்பப்படும் போது அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான வழியும் தெரியும்.
எனவே நமக்கு வரும் கஷ்டங்களை நுண்ணோக்கி வைத்து பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டு விட்டு வேறு வழியைத் தேடவும்.
தற்பொழுது நாம் படும் கஷ்டத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். இந்த கஷ்டங்கள் நம்மை மிகப்பெரிய கஷ்டத்திலிருந்து தடுத்து நம்மை காப்பாற்றி சிறு துன்பம் மட்டும் கொடுத்திருக்கலாம்.
ஆனால் நமக்கு இதுவே மிகப்பெரும் பாராமாக இருக்கலாம், அப்படியே பாராமாக இருந்தாலும் கடவுள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வெகுவிரைவில் தருவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கவலை நாளையத் துயரங்களை அழிப்பதில்லை
இன்றைய வலிமையை அழித்துவிடும் – என்பதை மறந்து விடாதீர்கள்.
எவ்வளவு சிரமங்கள் வந்தாலும், எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நாம் நினைத்தது எதிர்மாறாக நடந்தாலும், எடுத்த காரியம் நடக்கவில்லை என்றாலும் துவண்டு விடாதீர்கள்.
ஏன் அடுத்த விநாடியிலேயே மாறலாம். எனவே ஒரே அடியாக மனதிற்கு அதிக சந்தோஷத்தையும் அதிக துக்கத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
சந்தோஷம் எவ்வளவு வந்தாலும் வரவேற்புடன் ஏற்றுக்கொள்கின்ற நம்மால் சிறு தோல்வி வந்தாலும் ஏற்க மறுக்கின்றன.
எனவே நம் மனது பக்குவப்பட வேண்டும். முதலில் இவை கடினமாக இருக்கும். பிறகு நம் மனது எல்லாவற்றையும் சமமாக பார்க்கின்ற பக்குவ
நிலைக்கு வந்து விடும்.

No comments:

Post a Comment