Friday 10 March 2023

எளிமையும் நேர்மையும் கற்க.

 எளிமையும் நேர்மையும் கற்க.

நல்லதைக் கற்க
நயமுடன் கற்க
உண்மையைக் கற்க
உறவுகளைக் கற்க
நேர்மையைக் கற்க
நியாயத்தைக் கற்க
அன்பைக் கற்க
ஆற்றலைக் கற்க
உயர்ந்திடக் கற்க
உரிமைகளைக் கற்க
கல்வியைக் கற்க
கடமையைக் கற்க
வாழ்க்கையைக் கற்க
வாசிப்பைக் கற்க
ஆரோக்கியத்தைக் கற்க
அனுபவத்தைக் கற்க
நூல்களைக் கற்க
நுட்பத்தைக் கற்க
வரலாற்றைக் கற்க
வலிமையைக் கற்க
எளிமையைக் கற்க
எல்லோரும் கற்க
நலமுடன் வாழ்ந்திடக் கற்க
நயமுடன் பேசிடக் கற்க
வளமுடன் வாழக் கற்க
வசதியிலும் பணிவைக் கற்க
இயற்கையைக் கற்க
இயற்கையோடு வாழக் கற்க
இளமையில் கற்க
இனிமையாக
கற்க
முதுமையிலும் கற்க
முயன்று கற்க
வீழ்ந்தோரையும் கற்க
வீழாதிருக்கக் கற்க
நாளும் நாளும் கற்க
நல்லதைத் தேடிக் கற்க
புதியனக் கற்க
பழையனக் கற்க
பழமையைக் கற்க
புதுமையைக் கற்க
அகிம்சையைக் கற்க
அறிவு வளர்ந்திடக் கற்க
சிக்கனத்தைக் கற்க
சிகரம் அடைந்திடக் கற்க
வணங்கிடக் கற்க
வாழ்ந்தோரைக் கற்க
வாழ்ந்திடக் கற்க
வாழும் நாள் வரைக் கற்க
கற்க கற்க கசடறக் கற்க
கற்க கற்க அதன்படி வாழக் கற்க.

No comments:

Post a Comment