Wednesday 18 January 2023

தனிமனித உணர்ச்சிகள்.

 தனிமனித உணர்ச்சிகள்.

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ மதிப்பு மிக்கவர் என்றோ அறிவானவர் என்றோ அழகானவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம்.
இந்த பூமியில் ஒவ்வொரு மனிதர்களுமே சிறப்புக்குரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.
வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வியர்வை சிந்த நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் - பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.
உண்மையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாருமில்லை. சில வாய்ப்புகள்தான் யார் இந்தப் பொழுதில் அவசியமானவர் என்பதைப் புரிய வைக்கிறது.
அந்தப் புரிதலை உணர்ந்து கொள்பவர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்வர். மனிதநேயம் கொண்டவர்களாலேயே மக்களை திருப்திப்படுத்தும் சேவையை வழங்கமுடியும். அவர்களே மரணித்தாலும் மனிதர்கள் மனங்களில் இடம்பிடிப்பர்.
*மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.*
*சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.*
*அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். நிகரான மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்.*

No comments:

Post a Comment