Monday 30 January 2023

நேர்மை என்பதே சுயமரியாதை.

 நேர்மை என்பதே சுயமரியாதை.

எல்லாருமே சந்தோஷமாக, திருப்தியாக,வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.
அதற்காக
அருமையான
ஆலோசனைகள் சிலவற்றை இப்போது கவனிக்கலாம்.
நாம் செய்கிற வேலையை சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.
கடினமாக உழைக்கிறவர் சந்தோஷமாக இருப்பார். ஏனென்றால், அவரால் தன்னுடைய தேவைகளையும், தன் குடும்பத்தாருடைய தேவைகளையும் கவனித்துக்கொள்ள முடியும். கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்குக்கூட உதவ முடியும். முதலாளியும் அவரை உயர்வாக மதிப்பார். இப்படிக் கடினமாக உழைக்கிறவர் தன்னுடைய வேலையை அவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட மாட்டார்.
நாம் நேர்மையாக இருந்தால் சுயமரியாதையோடு இருப்போம், எதைப் பற்றியும் அதிகமாகக் கவலைப்பட மாட்டோம், நிம்மதியாகத் தூங்குவோம். மற்றவர்களும் நம்மை நம்புவார்கள், நம்மிடம் மதிப்பு மரியாதையுடன் நடந்துகொள்வார்கள். இந்த நல்ல விஷயங்களை எல்லாம் நேர்மை இல்லாதவர்களால் அனுபவிக்க முடியாது. அவர்களுடைய மனசாட்சி உறுத்திக்கொண்டே இருக்கும். என்றைக்காவது ஒருநாள் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்திலேயே வாழ்வார்கள்.
பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
“பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.”
சாப்பாட்டுக்கும், அத்தியாவசியமான மற்ற விஷயங்களுக்கும் நமக்குப் பணம் தேவை. ஆனால், “பண ஆசை” ரொம்ப ஆபத்தானது. பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது, ஒருவருடைய நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சிவிடும்.
இதனால், மனிதனின் வாழ்க்கையில் பிரச்சினை வந்துவிடும், பிள்ளைகளோடு நேரம் செலவிட முடியாமல் போய்விடும், உடம்பும் கெட்டுவிடும். அதுமட்டுமல்ல, நேர்மை இல்லாத ஏதாவதொரு விஷயத்தைச் செய்வதற்கான ஆசை வந்துவிடலாம்.
மேற்கண்ட ஆலோசனைகளைக் கேட்டு நடக்கிற
ஒருவர் வாழ்க்கையில் “செய்வதெல்லாம் வெற்றி பெறும்”.

No comments:

Post a Comment