Friday 27 January 2023

மதகுபட்டியில் நேற்று காலை நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றம்.

 மதகுபட்டியில் நேற்று காலை நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றம்.

நேற்று காலை சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி சொக்கலிங்கபுரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் நகரச் சிவன் கோவில் மற்றும் மாணிக்க விநாயகர் கோவிலில் நாளை காலை நடைபெற உள்ள திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு
சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நடுவராகப் பங்கேற்றார்.
பக்தி நெறியை வளர்ப்பவர்கள் பெண்களே என்ற அணியில் பேராசிரியர் புதுவயல் சிஎஸ். விசாலாட்சி, நகைச்சுவை நாவலர் எஸ். திருநாவுக்கரசு
ஆண்களே என்ற அணியில் புலவர்
வை. சங்கரலிங்கம், வழக்கறிஞர் தேவகோட்டை முத்து முத்தையா
வாதிட்டனர்.
பக்தி நெறியைப் பெரிதும் வளர்ப்பவர்கள் பெண்களே என நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் நடைபெற்ற பட்டிமன்றத்தில் அரங்கம் முழுவதும் பெருமக்கள் பங்கேற்று கேட்டு மகிழ்ந்தனர்.
விழாக்குழு தலைவர் எஸ்பி. ராமநாதன் செட்டியார் தலைமை வகித்தார், செயலாளர் ஏஎன். கண்ணப்ப செட்டியார் வரவேற்புரை நிகழ்த்தினார், ஒருங்கிணைப்பாளர் செயற்குழு உறுப்பினர் பிஎல். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் எஸ்பி. ஆறுமுகம், மேனாள் தலைவர் ஆர். திருநாவுக்கரசு செட்டியார், எம். எஸ். முத்துராமன், துணைத் தலைவர் ஆர்எம். நாராயணன் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
யாகசாலை மற்றும் உள்ள ஏற்பாடுகள், பொது விருந்து, கலைநிகழ்ச்சிகள் என விரிவான ஏற்பாடுகளை மதகுபட்டி நகரத்தார்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.
வாழிய ஆன்மிகப் பணிகள்.







































No comments:

Post a Comment