Monday 9 January 2023

வழியும் இலக்கும்.

 வழியும் இலக்கும்.

தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை.
*நேற்று என்ற ஒன்றை நீ மறந்தால் தான் நாளை எனும் நாள் உன் வாழ்க்கையில்
உதயம் ஆகும்*
பெரும்பாலும் இலட்சியத்தை நோக்கிச் செல்பவர்கள் பலரின் அலட்சியப் பேச்சுக்களைக் கண்டு கொள்வது கூட இல்லை.
*தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது.
நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மாரத்தான் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஓட்டமே*
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல.
அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும்
தன்னம்பிக்கைக்குமே சொந்தம்.
அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வாழாதீர்கள்,
எல்லோர்ருக்கும் பிடிக்கும் படி
எவராலும் வாழ முடியாது.
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
ஆனால் முயலாமை என்றும் வெல்லாது.
*தோல்வி அடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர இலக்குகளை அல்ல*
வெற்றிக் கதைகளைப் படிக்காதீர்கள்.
அது உங்களுக்குத் தகவலை மட்டுமே சொல்லும்
தோல்விக் கதைகளைப் படியுங்கள்
அதில் வெற்றி பெறுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும்.
*உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாவே தோன்றும். *

No comments:

Post a Comment