Monday 9 January 2023

பிறப்புக்குத்‌ தகப்பன்‌ கொடுத்தது ஒரு துளி ரத்தம்‌ மட்டுமே.

 பிறப்புக்குத்‌ தகப்பன்‌ கொடுத்தது ஒரு துளி ரத்தம்‌ மட்டுமே.

இவ்வளவு எலும்புகளும்‌, நரம்புகளும்‌ ரேகைகளும்‌ எங்கிருந்து வந்தன?
மண்டையோட்டை அறுத்துப்‌ பார்த்தால்‌ உள்ளே ரோமம்‌ இல்லை. இந்த
ரோமம்‌ வளர்வது எப்படி?
நாம்‌ வளர்வது எப்படி?
குழந்தைப்‌ பருவத்தில்‌ விழுந்த பல்‌ முளைப்பது எப்படி?
ஒன்பது ஓட்டைகள்‌ இருந்தும்‌ உள்ளே இருக்கும்‌ காற்று உலாவிக்கொண்டே
இருப்பது எப்படி?
இவை அறிவு போடும்‌ கேள்விகள்‌.
ஆனால்‌ அனுபவம்‌ காட்டும்‌ உண்மைகள்‌, இவற்றை விட அதிகமாகக்‌ கடவுள்‌
நம்பிக்கையை உறுதி செய்கின்றன.
இறைவனின்‌ அஸ்‌-திவாரம்‌ என்ன என்பதனை முதலிலேயே
கண்டுகொண்டவர்கள்‌ இந்துக்கள்தான்‌.
இரக்கம்‌, அன்பு, கருணையைக்‌ காட்டிய பெளத்தமதம்‌ கடவுள்‌ ஒன்றைக்‌
காட்டவில்லை.
ஆனால்‌, கடவுள்‌ என்று ஒன்றைக்‌ காட்டிய இந்துமதம்‌ இரக்கம்‌, அன்பு,
கருணையை விட்டுவிடவில்லை.
பெளத்த மதத்தை இந்துமதம்‌ ஜீரணித்து விட்டதற்குக்‌ காரணம்‌ இதுதான்‌.
வாழ்க்கையைக்‌ “கர்ம காண்டம்‌; ஞான காண்டம்‌” என்று பிரித்தது
இந்துமதம்தான்‌.
கர்ம காண்டத்தின்‌ தொழில்கள்‌ காரணமாக ஜாதி உண்டு. ஞான காண்டத்தில்‌
ஜாதி இல்லை; யாவரும்‌ சந்நியாசி ஆகலாம்‌.
லெளதிக்க வாழ்க்கையையும்‌, தெய்வ நம்பிக்கையையும்‌ ஒன்றாக இணைத்தது
இந்துமதம்‌.
உணவு, மருத்துவம்‌, தொழில்‌ அனைத்திலும்‌ பாவ புண்ணியங்களைக்‌
காட்டுவது இந்து மதம்‌.
உடல்‌ இன்பத்தைக்‌ ஒப்புக்கொண்டது இந்துமதம்‌.
அதற்கு மேற்பட்ட துறவு நிலையிலும்‌ ஆதிக்கம்‌ செலுத்துவது இந்துமதம்‌.
இன்பங்களுக்குச்‌ சடங்குகள்‌ செய்வது இந்து மதம்‌. துன்பங்களுக்கு ஆறுதல்‌
சொல்வது இந்துமதம்‌.
ஆகவேதான்‌, எந்த நிலையிலும்‌ ஒரு இந்துவுக்குக கடவுள்‌ நம்பிக்கை
எழுந்துக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாதவனும்‌,
மேற்சொன்ன நிலைகளுக்குநிலைகளுக்கு
தப்ப முடியாது.
“ஆஸ்தி என்றால்‌ சொத்து.
நாஸ்தி” என்றால்‌ பூஜ்ஜியம்‌.
நாஸ்திகன்‌” ஒன்றுமில்லாத சூனியம்‌.
இந்துவின்‌ கடவுள்‌ சூனியத்தில்‌ தோன்றி, செல்வத்தில்‌ பரிணமிக்கிறான்‌.
ஆகவே, நாஸ்திகனும்‌, இந்துவே; ஆஸ்திகனும்‌ இந்துவே.
இரண்டு பேரும்‌ கடவுளைப்‌ பற்றியே பேசுகிறார்கள்‌.
கண்ணதாசன்!
அர்த்தமுள்ள இந்துமதம்!

No comments:

Post a Comment