Wednesday 4 January 2023

தன்மையாக நடந்துகொள்வது .

 தன்மையாக நடந்துகொள்வது .

பர்ஸில் இருக்கும் பணமோ, சேர்த்து வைத்திருக்கும் பட்டங்களோ பதவிகளோ ஒரு மனிதனின் குணத்தைத் தீர்மானிக்காது. அந்த மனிதன் தன்னுடைய சக மனிதனை, தன்னைவிட நலிவடைந்த மனிதனை எவ்வாறு நடத்துகிறான் என்பதைப் பொறுத்தே, அவனின் குணம் தீர்மானிக்கப்படும்.
எனவே, பிற மனிதர்களிடம் தன்மையாக நடந்துகொள்வது முக்கியம். ஆனால், பெரும்பாலான கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் குரலில் ஒருவித அதிகார தொனி ஒலிக்கும். செய்யும் வேலைக்காக அதைப் பொறுத்துக்கொண்டு, அவர்களுக்கான சேவையை அங்கு வேலை செய்பவர்கள் வழங்குவதுண்டு.
இங்கிலாந்தில் உள்ள சாய் கஃபே (chai cafe) ஒன்று, சமீபத்தில் வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்கு வேலை செய்பவர்களுடன் தன்மையாக நடந்து கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுக்கான டீ விலை குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
அந்த கடையின் முதலாளி தன் வாடிக்கையாளர்களுக்காக அந்த அறிவிப்பை வைத்துள்ளார்.
வாடிக்கையாளர் *"Desi Chai" என்றால் டீயின் விலை 5 பவுண்டுகள்* வரை வசூலிக்கப்படும்.
அதுவே *"Desi Chai Please" என்றால் டீயின் விலை 3 பவுண்டுகள்* பெறப்படும்.
இன்னும் *"Hello Desi Chai Please" என்றால் டீயின் விலை 1 பவுண்டு* தான் ஆகும் என்று எழுதி இருந்தது.
வாடிக்கையாளர்கள் எவ்வளவு மரியாதையாக ஆர்டர் செய்கிறார்களோ அந்த அளவுக்கு ஒரே டீயின் விலை வெவ்வேறு கட்டணத்தில் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
சரியான விலையை விட குறைந்த விலையில் டீயை விற்பது உங்களுக்கு நஷ்டம் இல்லையா என்று அந்த முதலாளியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.
*"என்னைப் பொறுத்தவரை என் கடையின் உள்ளே வருபவர்களும் இந்த கடையின் பணியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் விருந்தினர் போல மரியாதையைப் பரிமாறிக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது’’* என்று தெரிவித்துள்ளார்.
தன்னோட கடையில வேலை பாக்குறவங்களும் மதிக்கப்படணும்னு நெனைக்குற அந்த மனசு இருக்கே
அதான் சார் கடவுள்.

No comments:

Post a Comment