Saturday 7 January 2023

நல்லோர் நற்துணை.

 நல்லோர் நற்துணை.

ஊருக்கெல்லாம் நல்ல அறிவுரை சொல்லும் ஆசிரியர் தன் மகனுக்கு கடைசி நேரத்தில் ஒரு அறிவுரை சொல்ல அருகில் அழைத்தார்.
மகனே என் பேச்சை எல்லோரும் கேட்டு முடிந்த வரை திருந்தி வாழ்வார்கள்.
மகன் என்பதாலேயே உன்னிடம் அதிகம் அறிவுரை கூறவில்லை. ஆனால் என் மகன் என்ற இறுமாப்பில் இருந்து விட்டேன் .
இதோ இறக்கும் தருவாயில் உனக்கு நல்ல தொரு புரியும் வண்ணம் ஒரு அறிவுரையைச் சொல்கேறேன்
கேள் என்றார்.
மகன் என்னத்த சொல்லபோறாரோ அதிகம் போரடிக்குமே என நெனச்சிட்டே அருகில் சென்றான்.
அப்பா மகனைப் பார்த்து மகனே உனக்கு ரொம்ப நீளமாக அறிவுரை சொன்னா பிடிக்காது .
அப்பா சின்னதா சொல்றேன்
பிடிச்சா நீ
பாத்துக்கோ அதுக்கப்புறம்
ஒன் இஷ்டம் ன்னு சொல்லிட்டு
நீ என்ன பண்ற அடிப்படியில போய் ஒரு கரிக்கட்டையை எடுத்துக்கோ. அப்புறம் பூஜை அறையில் இருக்கும் அந்த சந்தனக்கட்டை ஒரு துண்டை எடுத்துட்டு வா ன்னார்.
மகனும் இந்த கிழட்டு அப்பா எதுக்கு நம்மள கரிகட்டை & சந்தன கட்டை எடுத்திட்டு வரச் சொல்றாருன்னு யோசிச்சிட்டே எடுத்துட்டு வர்றான்.
அப்பா கிட்ட வந்ததும் இரண்டு கையும் நீட்டி அப்பா நீங்க சொன்ன சந்தனக் கட்டை மற்றும் கரிக்கட்டை எடுத்துட்டு வந்துட்டேன்னான். அப்பா சொன்னார் அந்த சந்தனக்கட்டையை முதலில் கீழே போடுன்னார். போட்டுட்டான் அடுத்து அந்த கரிக்கட்டையையும் கீழே போடுன்னார்.இப்ப இரண்டு கையில் இருந்த கட்டைகளை கீழே போட்டுட்டான்.
அப்பா கேட்டார் உன் கையில் சந்தனகட்டை இருந்ததல்லவா அதை முகர்ந்து பார்ன்னார்.
நல்ல சந்தன வாடை இருந்தது. அப்படியே அந்த கரிகட்டை வச்சு இருந்த கையைப் பார்ன்னார்.
நல்ல கரி ஒட்டிப் போய் இருந்ததது.
அப்பா சொன்னார் நல்ல பழக்கம் உள்ள நண்பர்கள் சந்தனக் கட்டை போல கீழே போட்டாலும் அவர்கள் நட்பு வாசனை கொடுத்து கொண்டே இருக்கும் .
இந்த கரிக்கட்டை எப்படி என்றால் கெட்ட நண்பர்கள் அவர்களை கீழே வீசி எறிந்தாலும் அவர்களிடம் பழகிய கெட்ட பழக்கங்கள் உன்னிடம் ஒட்டிக் கொண்டே இருக்கும்.
அதைப் போக்க நீ நிறைய பாடு படவேண்டும் .
அதனால் நீ தேர்ந்தெடுக்கும் போதே நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடு. இதுவே உனக்கான அறிவுரை என்றார்.

No comments:

Post a Comment