Monday 9 January 2023

வழியும் வழித் துணையும்.

 வழியும் வழித் துணையும்.

நம்பி வாழ்வதற்குச் சில
மனிதர்களும்
நம்பாமல் வாழ்வதற்குப் பல மனிதர்களும்.
இவரைப்போன்று இருக்க வேண்டுமென்று சிலரையும்
இவரைப்போன்று இருக்கக் கூடாதென்று இருக்கப் பலரையும் .
இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கையும்
எப்படி வேண்டுமானாலும்
வாழலாம் என்ற வாழ்க்கையும்.
கடவுள் யாரோ ஒருவர் மூலமாக நமக்கு வாழக்
கற்றுக் கொடுத்துக் கொண்டுதான்
இருக்கிறார்.
வாழ்க்கையில் ஆலோசனை சொல்ல
ஆயிரம் பேர் வருவார்கள்.
ஆதரவு சொல்ல ஒரு சிலர் தான் வருவார்கள்.
வழி சொல்ல ஆயிரம் பேர் வருவார்கள்
வழித்துணையாய் ஒரு சிலர் தான் வருவார்கள்.
உங்களின் உணர்ச்சிகளை விட
வலுவானதாக உங்களின்
மனதைத் திடப்படுத்துங்கள்.
இல்லையெனில்
ஒவ்வொரு சிறிய
விசயத்திற்கும்
உங்களை இழந்து
கொண்டிருப்பீர்கள்.
எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது
வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம்
என்று பலருக்குத் தெரிவதில்லை,
எனவே தோல்வியைத் தழுவிகின்றனர்.
நம்பிக்கையின் பிம்பத்திற்கு
பலம் சற்று கூடுதலாகவே
இருக்கும்.
மீண்டும் மீண்டும் எதைச் செய்து கொண்டிருக்கிறாயோ
அதுதான் உன் சுயரூபம்.
பிழையில்லாமல் தெரிந்த நெஞ்சங்கள்
நிஜமின்றிப் போனது நினைவுகளோடு.
அன்பை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும்
விலக முடியவில்லை
உண்மையாய் நேசித்தால்.

No comments:

Post a Comment