Monday 2 January 2023

திறமையை வெளிப்படுத்துங்கள்.

 திறமையை வெளிப்படுத்துங்கள்.

தவறைத் தவறெனப் புரிந்து கொண்டால் தானாகவே திருத்திக்கொள்ள வேண்டும்.
தவறெனப் பிறர் சொல்லும் போதாவது திருத்திக்
கொள்ள வேண்டும்.
கரைகள் இல்லாத ஆறுகளும் இல்லை
குறைகள் இல்லாத மனிதரும் இல்லை.
தவறைத் திருத்தி, உனை நிறைவாக்கிக் கொள்
வெற்றி நிச்சயம்.
வேப்ப மரத்தின் கசப்புத் தன்மையை மாற்ற நினைத்து
அதற்குத் தண்ணீருடன் நெய்யையும், தேனையும், ஊற்றி வளர்த்தாலும்
அதன் கசப்புத் தன்மை மாறாது.
அதைப்போன்றே தரங்கெட்ட மனிதர்களுக்கு
எத்தனை விதமான அறிவுரைகளை எடுத்துரைத்தாலும்.
அவர்கள் தங்களை ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
கோபம், ஈகோ, பொறாமை, இவைதான் பெரிய நோய்கள்,
இந்த மூன்று நோய்களிலிருந்தும் விலகி இருங்கள்.
வெற்றி பெற்றவர்களை விட
தோல்வி அடைந்தவர்களிடம் தான்
அதிக பதில்கள் இருக்கும்.
வலிக்காத வாழ்வு
பலிக்காத கனவில் மட்டுமே தோன்றும்.
வாழ்வில் சில வலிகள் இருக்கட்டும் .
அப்போது தான் சலிக்காத சந்தோஷங்கள் வாழ்வில் கிடைக்கும்.
கோபமும், ஆசையும்
வாழ்க்கையைப் பின்னோக்கித் தள்ளுமே தவிர
ஒருபோதும் முன்னோக்கித் தள்ளாது.
முதிர்ச்சி என்பது
பெரிய விசயங்களை
பேசத் தொடங்குவது அல்ல,
நுட்பமான சிறிய விசயங்களைப்
புரிந்து கொள்வதே.
பாராட்டுப் பெற முயற்சி செய்யாதீர்கள்.
திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
பாராட்டு தானாகவே உங்கள் காலடியில் விழும்.
நீங்கள் அமைதியாக வாழ விரும்பினால்
நீங்கள் பார்த்தததையும்
கேட்டதையும்
எல்லோரிடமும் கூறாதீர்கள்.
எந்த ஒரு விசயத்தையும் முடிக்க வேணும்னா
ஆர்வம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் மட்டும்
இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment