Tuesday 3 January 2023

உறுதியான உழைப்பு.

 உறுதியான உழைப்பு.

அமைதியாக நடவடிக்கை எடுங்கள்
சிங்கம் தாக்கும்போது
சத்தம் இடுவது இல்லை.
யாரும் இங்கே அர்த்தமில்லாமல் பிறப்பதில்லை
வாழ்க்கை முடியும் முன் ஏதாவது செய்ய வேண்டியே.
*நான் சபித்தேன்* நடந்து விட்டது
எனச் சொல்ல பலர் உண்டு.
*நான் வாழ்த்தினேன்,*
நன்றாக வாழ்கிறார் எனக் கூறிடத்தான் ஆள் குறைவு .
காட்டாற்று வெள்ளம் கூட நல்லது தான்
பல அசிங்கங்களை அடித்துச் சென்று சுத்தமாக்குகிறது.
நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் காணாமல் போவது நியதி.
தோற்றுக் கொண்டே இருந்தாலும், வரும் அவமானங்களை வெற்றி எனும் சூறாவளி அடித்துச் செல்லும்.
உறுதியான உழைப்புக்கு
வெற்றி நிச்சயம்.
நீ சந்திக்கும் எல்லா மனிதரகளுக்குள்ளும் ஏதோ ஒரு வலி இருக்கிறது.
வலியைக் குறைக்கும் நிவாரணியாக இருக்க முயற்சி செய்,
அதனை அதிகரித்து விடுபவனாக இருந்து விடாதே.
சூரியனும், மழையும் பயிர்களை வளரச் செய்வது போல
*விமர்சனங்களும்*
*பாராட்டுக்களும்*
உங்களுக்கு உரம் போட்டு வளரச் செய்கின்றன.
வாழ்க்கை ஒரு கேமிரா மாதிரி
தேவையானவற்றை மட்டும் போகஸ் செய்து வாழவேண்டும்.
சுத்த முட்டாளா இருக்கியே என்பவர்களுக்குத் தெரிவதில்லை.
முட்டாள்கள் தான்
பல அறிவாளிகளை அடையாளம் காட்டுகிறான் என்று.
முதலில் உன்னை நீ உயர்வாக எண்ணிக்கொள்
மற்றதெல்லாம் தானாகத் தேடி வரும்.
யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து
குற்றங்களை மேலும் மேலும்
செய்து கொண்டே இருக்காதே.
எங்கே சென்று ஒளிந்தாலும்
அதன் பலனை ஒரு நாள் அனுபவித்தே
தீர வேண்டும்.

No comments:

Post a Comment