Wednesday 11 January 2023

குற்றமற்ற மனநிலை வேண்டும்.

 குற்றமற்ற மனநிலை வேண்டும்.

*எது அமைதியுடையதோ,
அதுவே செல்வம்.*
*எதை அனுபவிக்கும் போது குற்றமற்ற ஒரு மனநிலையில் இருக்கிறோமோ, அதுவே உயர்வு.*
நீங்கள் ஒரு சந்தோஷமான நபர் என்று நினைக்கிறீர்களா ஆம் என்றால், எது உங்களைச் சந்தோஷப்படுத்துகிறது உங்கள் குடும்பமா, வேலையா, மத நம்பிக்கையா, உங்கள் பேங்க் பேலன்ஸா.
குறிப்பிட்ட ஒரு லட்சியத்தை அடையும்போது அல்லது ஆசைப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போது நிறைய பேருடைய மனதில் சந்தோஷ அலைகள் பொங்கியெழுகின்றன.
ஆனால், அந்தச் சந்தோஷ அலைகள் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கின்றன பெரும்பாலும்,
கொஞ்ச நேரத்துக்குத்தான்.
அப்ப சந்தோஷப் பாதையில் நிரந்தரமாகச் செல்ல என்னென்ன நெறிமுறைகள் நமக்கு உதவும்.
*மனத் திருப்தியும், தாராள குணமும், உடல் ஆரோக்கியமும், மன உறுதியும், அன்பு, மன்னிப்பு, வாழ்க்கையில் ஒரு நோக்கம், நம்பிக்கை*
இவைகள் வேண்டும்.
சந்தோஷம் என்பது *‘நல்லபடியாக வாழ்கிறோம். இப்படியே கடைசிவரை வாழ்வோம்’* என்ற மனநிலை, மனத் திருப்தியோடு இருப்பது.
*சந்தோஷம் என்பது ஒரு தொடர் பயணம், அதற்கு ஒரு முடிவே இல்லை.*

No comments:

Post a Comment