Wednesday 25 January 2023

சர்வாதிகார எண்ணம் வீழும்.

 சர்வாதிகார எண்ணம் வீழும்.

*தேடிக் கிடைப்பதில்லை
புகழும் மரியாதையும்.*
இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரியான முசோலினியின் ஆட்சிக் காலத்தில்,
அங்கு ஓடிய ரயில்கள் சரியான நேரத்துக்கு வராமல் இருந்ததற்காக சில ரயில் வண்டி ஓட்டுனர்களை அவர் சுட்டுத் தள்ளிவிட்டார்.
அன்றிலிருந்து அந்நாட்டின் சரித்திரத்திலேயே முதன் முறையாக அனைத்து ரயில்களும் சரியான நேரத்துக்கு ஓடத் துவங்கி விட்டன.
இதைப் பார்த்து பூரித்துப் போன முசோலினி, தன்னுடைய இந்த சாதனையைப் பாராட்டும் விதமாக, தன் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டார்.
ஆனால் அதில் ஒரு சிக்கல் எழுந்தது. தபால்காரர்களின் பைகளுக்குள் இந்த அஞ்சல் தலைகள் மட்டும் தபாலிலிருந்து பிய்ந்து விழுந்து குவியல், குவியல்களாகக் கிடந்தன. இந்த அஞ்சல்தலைகள் மட்டும் தபால்களின் மேல்
சரியாக ஒட்டவே இல்லை.
இது முசோலினியின் கவனத்துக்கு வந்தபோது, தன் நாட்டின் தலைமை அஞ்சல் அதிகாரியைக் கூப்பிட்டு, ஏன் நீங்கள் அஞ்சல் தலைக்குப் பின்னால் நன்றாக ஒட்டுகிற பசையைப் பயன்படுத்தவில்லை என்று கேட்டார்.
அதற்கு அந்த தலைமை அஞ்சல் அதிகாரி பயத்தில் நடுங்கிக் கொண்டே சொன்னார்,
*"நாங்கள் சிறந்த வகையான பசையைத்தான் பயன்படுத்துகிறோம்.
ஆனால் மக்கள் தபால்தலையின் பின்பக்கத்தில் எச்சில் துப்பி ஒட்டுவதற்குப் பதிலாக, முன்பக்கத்தில் எச்சில் துப்பி ஒட்டி வைத்துவிடுவதால், அது சரியாக ஒட்டுவதில்லை."*
*தேடிக் கிடைப்பதில்லை
புகழும் மரியாதையும்.*

No comments:

Post a Comment