Thursday 19 January 2023

கேட்பதும் பேசுவதும் சுகம்.

 கேட்பதும் பேசுவதும் சுகம்.

அறிவாளிகள் மத்தியில் பேசுவதைவிட,
நிறைய கேட்பது புத்திசாலித்தனம்.
நாம் பேசும்போது நமக்குத் தெரிந்த அரைகுறை அறிவை வெளிப்படுத்துகிறோம்.
அதுவே நாம் கேட்க்கும் போது
புது விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
இன்னும்
சிலரது மத்தியில் நாம் பேசாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல்
அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்காமல் இருப்பதும் தான் புத்திசாலித்தனம்.
ஏனென்றால்.
எந்த விஷயத்தை எடுத்துச் சொன்னாலும்
அவர்கள் எதிர்மறையான சிந்தனை ஒன்றை வைத்திருப்பார்கள்.
அதுதான் சரி என்று வாதிட்டு வெற்றி பெறவே எண்ணுபவர்கள்
வாதத்தில் வெற்றி கொள்வதால் ஞானம் சித்திக்குமா என்ன.
எவரொருவர் வாதங்களுக்கு வழி மொழிகிறாரோ
அவர்களிடம் விலகி இருப்பதும் ஞானமே.
செயலைச் செய்வதற்கு உடல் சக்தி தேவை என்பது போல
செய்யக் கூடாத செயல்களைத் தவிர்ப்பற்கு
மனதின் சக்தி மிகவும்
தேவைப்படுகிறது.
பிறரைக் கேள்வி கேட்பதலோ
அல்லது தனக்குத் தெரிந்ததை விவாதிப்பதாலோ ஒன்றும் ஆகாது.
நேரம் விரையம் ஆகும் அவ்வளவு தான்.
*பேசுவது ஒரு திறமை
பேசாமல் இருப்பது "பெரிய" திறமை.*

No comments:

Post a Comment