Friday 11 June 2021

கீழே விழுவது தவறில்லை

 கீழே விழுவது தவறில்லை

கீழே விழுந்து கிடப்பது தான் தவறு.
புத்திசாலிகள் தாங்கள் செல்லும் வழியில் சேறு சகதி இருந்தால் அதில் காலை வைக்காமல் சேற்றைச்சுற்றி வேறு பாதையில் சென்று விடுவார்கள்.வாழ்க்கைப் பாதையில் இப்படிப்பட்ட பள்ளங்கள் வருவது இயற்கை. அதில் விழுவதும் இயற்கை ஆனால்
1.விழுந்தவுடன் எழுகிறோமா?
2.எழுந்த பிறகு பாடம் கற்றுக் கொள்கிறோமா?
3.பாடம் கற்றுக் கொண்ட பிறகு பாதையை மாற்றிக் கொள்கிறோமா?
மனிதர்களின் வெற்றி இந்த மூன்று கேள்விகளையும் அடக்கி இருக்கின்றது என்றால் மிகையாகாது.
ஒரு சராசரி மனிதன் அன்றாடம் எந்த பள்ளங்களில் விழலாம் என்று பார்க்கலாம்.
~அதிகமான தூக்கம்
~அதிக நேரம் தொலைக்காட்சி பார்வை
~தேவையில்லாத பத்திரிக்கைகள் நூல்கள்
~அரட்டை
~வெட்டியாகஊர் சுற்றல்
~மற்றவர்களைப் பற்றி விவாதம் கேலி கிண்டல்
~அதிகமாக உண்ணுதல்
~புகை மது சூதாட்டம்
~தவறான நண்பர்கள்
~குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சிகள்
~லஞ்சம் கடன் வாங்குதல்
~ஆடம்பரச் செலவுகள்.
~பொருளாதாரக் கட்டுப்பாடின்மை
இப்படி ஒரு பட்டியல் போடலாம். நீங்களே உட்கார்ந்து உங்களுக்கான நீங்கள் இடறி விழும் பள்ளங்களைப் பற்றிய பட்டியலைப் போடலாம். சில நேரங்களில் நாம் செய்கின்ற தவறு நமக்குத் தெரியாது. உங்களுடைய மனைவி பிள்ளைகள் நண்பர்கள் குறைகளைச் சரியாக சுட்டிக் காட்டுவார்கள்.
இந்தப் பட்டியலில் இருந்து உங்கள் குறைகள் பலவீனங்கள் இடறி விழும் பள்ளங்கள் உங்களுக்குப் புலனாகும்.
இதே போன்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏதாவது ஒரு அமைதியான இடத்திற்கு சென்று உட்கார்ந்து தனித்தனியாக அவரவர்கள் இடறி விழும் பள்ளங்களை அவர்களை அடையாளம் காட்டி பட்டியல் தயாரிக்கலாம்.பின்னர் குடும்ப உறுப்பினர்கள் முன்னாள் துணிச்சலாக அந்தப் பட்டியலை படித்துவிட்டு இதையெல்லாம் தவிர்ப்போம் எவற்றை எல்லாம் விட்டு விடுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி கூறலாம்.
அத்துடன் குடும்பமாக இவற்றையெல்லாம் தவிர்ப்போம் என்று முடிவெடுக்கலாம். பிறகு அவற்றிலிருந்து எப்படி எவ்வளவு விரைவில் வெளியேறலாம் என்பதை தீர்மானிக்கலாம்.
பட்டுக்கோட்டையார் பாடல்களில் ஒன்றை நினைவு கூர்வது சிறப்புடையது.
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
கீழே இருந்து எழுந்த பின் விழ முடியாத பாதையில் விரைந்து செல்லலாமே.

No comments:

Post a Comment