Monday 28 June 2021

வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

 வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ..

ஒரு அறிஞர் கூறினார்:
''வாய்ப்பு என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அன்று நமக்குக் கிடைக்கும் இனிய பழத்தைப் போலத்தான்''. அது கெட்டுப் போவதற்கு முன் அதைப் பயன்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் பழம் அழுகிப் போய் விடும்; பயன் தராது...
இன்றைய விநாடிகளை!, நாளையோ!, நாளை மறுநாளோ!, நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது..
நாளை மறுநாள் நீங்கள் செய்யும் வேலை, நாளை மறுநாள் நீங்கள் செய்யக் கூடிய வேலை தானே தவிர, இன்றைக்குச் செய்யக் கூடிய வேலை அல்ல.
இன்றைய நாளது தேதி, மாதம் - ஆண்டு இனி மீண்டும் வராது...
இன்று கிடைப்பன இன்றே, உடனே மதிப்பிட்டு ஏற்கும் உறுதியும், மனப்பான்மையும் நமக்கு இருக்க வேண்டும்...
கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவர், மனிதனிடம் வந்து போகும் வாய்ப்பினை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறார்...
அதுதான் வாய்ப்பு (opportunity) என்னும் சிலை...
அந்தச் சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்...
வாய்ப்புச் சிலையிடம் சில கேள்விகள் ...
உனக்கு இறக்கை எதற்கு...?
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக.?
முன்னந்தலையில் கூந்தல் எதற்கு...?
மக்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொளவதற்காக...!
ஏன் பெருவிரலில் நிற்கிறாய்...?
வாய்ப்பினைப் பயன்படுத்தாதோர்களிடம் இருந்து
கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக...!
பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது...?
வாய்ப்பினைத் தவற விட்டவர்கள் என்னைப் பற்றிக் கொள்ளாது இருப்பதற்காக...!
சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள்...
இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்...
ஒரு முறை வாய்ப்பு நழுவி விட்டால் அதே வாய்ப்பு மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்...?
ஆம் நண்பர்களே.
வாய்ப்பு என்பது எல்லோருக்கும் எப்போதும் வராது; வரும் போது அதை வலுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
நழுவ விடக் கூடாது. நழுவ விட்டால், அதே வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் அடுத்த மனிதர் அதைக் கொத்திக் கொண்டு போய் விடுவார்.
இன்று கையில் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விட்டு விட்டு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்து இருப்பதை விட, கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேற முயற்சிப்பதே வெற்றியைத் தரும்.

No comments:

Post a Comment