Monday 14 June 2021

வெற்றி மகிழ்ச்சியைக் கொடுக்குமா அல்லது மகிழ்ச்சி வெற்றியைத் தேடித் தருமா . வெற்றி மகிழ்ச்சியைக் கொடுக்குமா அல்லது மகிழ்ச்சி வெற்றியைத் தேடித்தருமா ? எல்லா வெற்றியும் மகிழ்ச்சியைத் தேடித்தான் என்றாலும் வெற்றி தரமுடியாத திருப்தி மகிழ்ச்சியில் எப்போதும் உள்ளடக்கியுள்ளது குழந்தைகளின் வெற்றி பெற்றோருக்கு மகிழ்ச்சி… பெற்றோரின் மகிழ்ச்சி குழந்தைகளின் பெருமகிழ்ச்சி மகிழ்ச்சி வெற்றியைத் தரும் என்று உத்தரவாதம் இல்லை. தேவையும் இல்லை. மகிழ்ச்சிக்கும் பணத்திற்கும் சம்பந்தம் இல்லை. பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. அதே சமயம் பணபற்றாகுறையினால் மகிழ்ச்சி குறையவும் வாய்புள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாம் பணத்தை வாழ்கையில் பிரதானப் படுத்தி மற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிட்டோம். இந்த மனோபாவத்தை பரவலாக காணலாம். வெற்றி இலக்குகளை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு வெற்றி இன்னொரு வெற்றியைத் தேடி தொடர்ந்து பயணிக்கிறது. படிப்பில் வெற்றி வேலைத்தேடலில் வெற்றி சம்பாதிப்பதில் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வதில் குழந்தை அவர்கள் கல்வி என்று தொடர்ந்த தேடல் பயணம் மகிழ்ச்சி மனநிலை சார்ந்தது. காலை இருக்கும் மகிழ்ச்சி மாலை இருப்பதில்லை. இரவு ஒரு போன் கால் மகிழ்ச்சி தந்து விடும். மகிழ்ச்சி பக்கத்திலிருக்கும் பிள்ளையார். தினமும் பார்க்கலாம் ரசிக்கலாம் எதையும் பெரிதாக தேடுவதில்லை. வெற்றி சதுரகிரி மலை ஏறுவது போல். சறுக்கும் பாறைகள் தாண்டி போய் சேர்ந்ததும் சிறு மகிழ்ச்சி… முடிந்ததும் அடுத்தமுறை வெள்ளியங்கிரி தேடும். முடிவில்லாத பயணம். மகிழ்ச்சி பாக்கெட்டுக்குள்ளே உள்ளேயே இருக்கிற சாக்லேட்டை கவர் பிரிக்கத் தெரிந்தால் போதும். நம் வாழ்வில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட ஏராளமான மகிழ்ச்சி பொதிந்து உள்ளது.

 வெற்றி மகிழ்ச்சியைக் கொடுக்குமா அல்லது மகிழ்ச்சி வெற்றியைத் தேடித் தருமா .

வெற்றி மகிழ்ச்சியைக் கொடுக்குமா அல்லது மகிழ்ச்சி வெற்றியைத் தேடித்தருமா ?
எல்லா வெற்றியும் மகிழ்ச்சியைத் தேடித்தான் என்றாலும் வெற்றி தரமுடியாத திருப்தி மகிழ்ச்சியில் எப்போதும் உள்ளடக்கியுள்ளது
குழந்தைகளின் வெற்றி பெற்றோருக்கு மகிழ்ச்சி… பெற்றோரின் மகிழ்ச்சி குழந்தைகளின் பெருமகிழ்ச்சி
மகிழ்ச்சி வெற்றியைத் தரும் என்று உத்தரவாதம் இல்லை. தேவையும் இல்லை.
மகிழ்ச்சிக்கும் பணத்திற்கும் சம்பந்தம் இல்லை. பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. அதே சமயம் பணபற்றாகுறையினால் மகிழ்ச்சி குறையவும் வாய்புள்ளது.
தெரிந்தோ தெரியாமலோ நாம் பணத்தை வாழ்கையில் பிரதானப் படுத்தி மற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிட்டோம். இந்த மனோபாவத்தை பரவலாக காணலாம்.
வெற்றி இலக்குகளை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு வெற்றி இன்னொரு வெற்றியைத் தேடி தொடர்ந்து பயணிக்கிறது. படிப்பில் வெற்றி வேலைத்தேடலில் வெற்றி சம்பாதிப்பதில் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வதில் குழந்தை அவர்கள் கல்வி என்று தொடர்ந்த தேடல் பயணம்
மகிழ்ச்சி மனநிலை சார்ந்தது. காலை இருக்கும் மகிழ்ச்சி மாலை இருப்பதில்லை. இரவு ஒரு போன் கால் மகிழ்ச்சி தந்து விடும்.
மகிழ்ச்சி பக்கத்திலிருக்கும் பிள்ளையார். தினமும் பார்க்கலாம் ரசிக்கலாம் எதையும் பெரிதாக தேடுவதில்லை.
வெற்றி சதுரகிரி மலை ஏறுவது போல். சறுக்கும் பாறைகள் தாண்டி போய் சேர்ந்ததும் சிறு மகிழ்ச்சி… முடிந்ததும் அடுத்தமுறை வெள்ளியங்கிரி தேடும். முடிவில்லாத பயணம்.
மகிழ்ச்சி பாக்கெட்டுக்குள்ளே உள்ளேயே இருக்கிற சாக்லேட்டை கவர் பிரிக்கத் தெரிந்தால் போதும். நம் வாழ்வில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட ஏராளமான மகிழ்ச்சி பொதிந்து உள்ளது.

No comments:

Post a Comment